நேபாளத்தில் பலத்த மழை, வெள்ளத்தால் சேதம் ! நிலச்சரிவால் உயிர் பலி !

உலகம் சற்றுமுன்

nebal - 2026நேபாள நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் கடும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை, 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் வெள்ளத்தில் சிக்கிய 24 பேரை காணவில்லை என்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை முதல் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இமயமலை பகுதியின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக நேபாள நாட்டின் கிழக்குப் பகுதியிலும், அதன் தெற்கு சமவெளிகளிலும் கடுமையான மழை பெய்து வருகிறது.

பலத்த மழை காரணமாக மின்சாரம் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

நேபாளத்தின் தாழ்வான பகுதிகளை பெரு வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. மழை நீர் சூழ்ந்ததால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கிழக்கு நேபாளத்தில் பாயும் கோசி நதியில், அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனனர்.

நேபாளத்தில் உள்ள மகோத்தரி பகுதியில் இருக்கும் முக்கிய நெடுஞ்சாலை பாலம் பலத்த சேதமடைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேபாள வானிலை மையம்  எதிர்வரும் நாட்களில் இன்னும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  எச்சரித்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 100 மி.மீ வரை தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் இன்னும் சற்றுக் கவனமுடன் இருக்கமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் தற்போது பெய்து வரும் கனமழை பற்றி கவலை தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் காலநிலை, மழைக்கால முறைகளில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது அதனால்  எதிர்காலத்தில் கடுமையான வறட்சி அல்லது இன்னும் அதி தீவிர மழை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு நேபாளம் தயாராக வேண்டும் என தெரிவித்துயுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.