நல்ல பாம்பு ஒன்று ஒடிசா மாநிலம் பூரி நகரில் ஒரு வீட்டுக்குள் நுழைந்தது. அவ்வீட்டின் உரிமையாளர் அப்பாம்பினை கம்பியால் தாக்கினார். இதில் காயப்பட்ட அந்தப் பாம்பு அங்கிருந்து தப்பியது.
இதுகுறித்து பாம்புகள் நல குழுமத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், பாம்பைப் பிடித்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புவனேஷ்வர் கால்நடை மருத்துவமனைக்குச் கொண்டு சென்றனர். அங்கு பாம்பின் உடலை துளைத்துக் கிழித்திருந்த இரும்புக் கம்பி லாவகமாக எடுக்கப்பட்டது. கம்பியால் குத்தப்பட்டதால் நுரையீரலில் படுகாயமடைந்த அந்தப் பாம்பு தற்போது நல்ல நிலையில் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



