தமிழகத்தில் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் தண்ணீர் தேடி அலையும் அவலநிலை எங்கும் நிலவி வருகிறது. சென்னையின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
அம்பத்தூரில் நடைபெற்ற திருமணம் விழாவில், மணமகன் பாலாஜி மற்றும் மணமகள் ஜனனி இருவருக்கும் நண்பர்கள், உறவினர்கள் எனத் திருமணத்திற்கு வந்த பலரும் தண்ணீர் கோன்களைப் பரிசாகத் திருமண ஜோடிக்கு வழங்கியுள்ளனர்.
தண்ணீர் பஞ்சத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இத்தகைய புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். தற்பொழுது அவர்கள் செய்த விஷயம் சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது.
அம்பத்தூரில் நடைபெற்ற திருமணம் விழாவில், மணமகன் பாலாஜி மற்றும் மணமகள் ஜனனி இருவருக்கும், திருமணத்திற்கு வந்த பலரும் தண்ணீர் கேன்களைப் பரிசாகத் திருமண ஜோடிக்கு வழங்கியுள்ளனர்.
குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்தும் படி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வேண்டுகோள் விடுத்து, மணமக்களுக்கு வாழ்த்து கூறி விடைபெற்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இனி நடக்கவிருக்கும் திருமணங்களுக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தண்ணீர் கேன்களை பரிசாக வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.



