கொடுமைடா சாமீ! புது மணப்பெண்ணை கொன்று… சூட்கேஸில் அடைத்து…

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
suitcase new bride - 2026
  • புது மணப்பெண்ணை கொன்று சூட்கேசில் போட்டு அடைத்து… கொடுமைடா சாமி!
  • சூட்கேசில் அடைக்கப்பட்ட புது மணப்பெண்ணின் சடலம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சந்தேகத்திற்கு இடமாக கருப்பு நிற சூட்கேசை கண்ட உள்ளூர் வாசிகள் போலீசாருக்கு செய்தி தெரிவித்தனர். அதனை திறந்து பார்த்தால் புதுமணப் பெண் சடலமாக காணப்பட்டாள்.

புதுமணப் பெண்ணைக் கொடூரமாக கொன்று சூட்கேசில் அடைத்து தூக்கியெறிந்த கொடுமையான சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கஜியாபாத் நகர எல்லையில் சந்தேகத்திற்கிடமாக கிடந்த ஒரு கருப்பு நிற சூட்கேசை கண்ட உள்ளூர்வாசிகள் போலீஸாருக்கு செய்தி தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூட்கேசை திறந்து பார்த்தார்கள். அதில் ஒரு இளம் பெண்ணின் சடலம் அடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்கள்.

அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் இறந்த உடலை கைப்பற்றிய போலீசார் ஆதாரங்களை சேகரிக்கும் வேலையில் இறங்கினார்கள். சூட்கேசில் சடலமாக தெரிந்த இளம் பெண்ணிற்கு அண்மையில்தான் திருமணம் ஆனதாக போலீசார் விசாரணையில் தெரிந்தது.

புதுமணப் பெண்ணை கொடூரமாக கொன்று சூட்கேசில் அடைத்து நகர எல்லையில் தூக்கி எறிந்து இருப்பார்கள் என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள். ஆனால் அவர் யார் எதற்காக கொன்றார்கள் திருமணமான சில நாட்களிலேயே கொலைக்கு ஆளானதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன போன்ற விஷயங்களை மீது போலீசார் விசாரணை செய்தார்கள்.

ALSO READ:  சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு பாடம் எடுத்த பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன்!

போலீஸ் விசாரணையின் போது கொல்லப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்ட பெண்ணின் பெயர் பரிஷா என்று கண்டறிந்தார்கள். ஜாபர் அலி என்பவரின் மகளான பரிஷா அலிகரில் வசிப்பவர்கள். சமீபத்தில் புலாந்த்ஷார் என்ற இடத்தில் திருமணம் நடந்தது.

உத்தர் பிரதேஷ் போலீசார் செவ்வாயன்று ஜூலை 28 கொன்று சூட்கேசில் அடைக்கப்பட்ட பெண் யார் என்பதை விசாரணையில் கண்டுபிடித்து உள்ளார்கள். இந்த பெண்ணின் பெயர் பரிஷா. தந்தையின் பெயர் ஜாஃபர் அலி. அலிகரில் நகரில் வசிப்பவர். அண்மையில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.

அந்தப் பெண் ஜூன் 25 ம் தேதி வரதட்சனை கொடுமை குறித்து மாமியார் மாமனார் மேல் போலீசிடம் புலாந்த்ஷார் என்ற இடத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பிறகு அந்தப் பெண்ணைக் காணவில்லை. இறந்த பெண்ணின் உடல் கஜியாபாதில் உள்ள தஷ்மேஷ் வாடிகா என்ற இடத்தில் கண்டறியப்பட்டது. கொல்லப்பட்ட பெண்ணுக்கு 25-ல் இருந்து 30 வயதுக்குள் இருக்கும்.

போலீசாரின் கூற்றுப்படி அந்தப் பெண்ணின் உடலில் பல ஆழமான காயங்கள் தென்பட்டன. மேற்கொண்டு போலீசார் விசாரணையில் உள்ளனர்.

கல்யாணத்துக்கு பெண் கிடைக்காமல் பிள்ளையைப் பெற்றவர்கள் புலம்புகிறார்கள்.
வரும் செய்திகளைப் பார்த்தால்… இப்படி இருக்கே…!

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.