வேதா நிலையம் அரசுடைமை ஆக்கப்பட்டது.. அரசிதழில் விபர பட்டியல்!

சற்றுமுன் தமிழகம்
Screenshot 2020 0729 113640 - 2026

மறைந்த முன்னாள் முதல்வர் வாழ்ந்த ‘வேதா நிலையம்’ வீடு அரசுடைமை ஆக்கப்பட்டது குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் ஜெ., வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சென்னை, போயஸ் தோட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, ‘வேதா நிலையம்’ வீடு, அரசுடைமை ஆக்கப்பட்டது. அதற்கான தொகை, 68 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்தி, ஜெ., வீட்டை தமிழக அரசு மீட்டெடுத்தது.

இந்நிலையில், வேதா நிலையம் வீட்டை அரசுடைமை ஆக்கப்பட்டதை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்த அரசிதழில் வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதில் மொத்தம் 32,721 பொருட்கள் வீட்டில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள சொத்துகள் விவரங்கள்: 4 கிலோ 372 கிராம் தங்கம் பொருட்கள் – 14

601 கிலோ 424 கிராம் வெள்ளிப் பொருட்கள் – 867 டிவிகள் – 11 பிரிட்ஜ்கள் – 10 ஏசி.,கள் – 38 பர்னிச்சர் பொருட்கள் – 556 துணிகள், துண்டுகள், போர்வைகள், தலையணை உறைகள், செருப்புகள் உள்ளிட்டவை – 10,438 தொலைபேசி / மொபைல்போன் – 29 புத்தகங்கள் – 8,376 ஸ்டேசனரி பொருட்கள் – 253 சூட்கேஸ்கள் – 65 கடிகாரங்கள் – 6 ஜெராக்ஸ் மிஷின் – 1 லேசர் பிரிண்டர் – 1

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.