12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு!

கல்வி சற்றுமுன் தமிழகம்
corona discussion cm
corona discussion cm

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, கொரோனா ஊடரங்கில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு! இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனோ பரவலைக் கட்டுப்படுத்த அரசுத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது எடுக்கப் பட்ட முடிவுகளின்படி…

கொரோனா பரவல் எதிரொலியாக, தமிழ்நாட்டில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

12ஆம் வகுப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளன.

12ஆம் வகுப்புத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.