95 ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு!

Published:

tnsecretariat
tnsecretariat

தரம் உயர்த்தப்பட்ட 19 உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்களுக்கு 2023 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு.

தரம் உயர்த்தப்பட்ட 19 உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்கள் 2023 வரை பணி நீட்டிப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2016-17 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 19 நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரமுயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 19 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 95 (19×5) பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டும் ஆணைகள் வெளியிடப்பட்டன.

இப்பணியிடங்களுக்கு 14.01.2018 முதல் 31.12.2020 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக தரமுயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட பணியிட நீட்டிப்பு 31.12.2020 உடன் முடிவடைந்ததால், இப்பணியிடங்களுக்கு 01.012021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசிடம் கோரிக்கை வைத்தார்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!
go for teachers - 2026

பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை பரிசினை செய்து 19 உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்களுக்கு 2023-ஆம் ஆண்டு டிசம்பர் வரை 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img