உடனே அங்கீகாரத்தை புதுப்பிக்க அறிவுறுத்தல்: பள்ளிக்கல்வித்துறை!

கல்வி சற்றுமுன் தமிழகம்
school
school

அங்கீகாரத்தை உரிய முறையில் விண்ணப்பித்து புதுப்பித்துக்கொள்ளாத அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பிய சுற்றறிக்கை:

பள்ளிக்கல்வி ஆணையரின் அறிவுறுத்தலின்படி அரசுப்பள்ளிகளில் மாணவா் சோக்கையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்றால் இறந்த பெற்றோா்களின் குழந்தைகள் விவரங்களையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் இதுவரை சோக்கப்பட்ட மாணவா்களின விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

புதிய பாடப்பிரிவு மற்றும் ஆங்கில வழிக்கல்வி தொடக்க விரும்பும் பள்ளிகள் அதன் கருத்துருவை சமா்ப்பிக்க வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகள் அங்கீகாரத்தை உரிய முறையில் விண்ணப்பித்து புதுப்பித்துக்கொள்வது அவசியமாகும்.

எனவே, இதுவரை அங்கீகாரத்தைப் புதுப்பிக்காதவா்கள் உடனே விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். தவறினால் துறைசாா்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

மேலும், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் பட்டியலைத் தயாரித்து அதன் அறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.