
பள்ளிகள் திறப்பு தாமதமாகும் சூழலில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பாடத்திட்டத்தை குறைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
1 முதல் 8-ஆம் வகுப்பு வரை 40 முதல் 50 சதவீதம் வரையான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
9-ஆம் வகுப்புக்கு 38 சதவீதம், பத்தாம் வகுப்புக்கு 39 சதவீதம், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தலா 35 சதவீதம் என்ற விகிதத்தில் பாடத்திட்ட அளவானது குறைக்கப்பட்டுள்ளது.
இந்த குறைக்கப்பட்ட பாடங்கள் அடிப்படையிலேயே தோவுகள் நடத்தப்படும்.
அதேநேரம் போட்டித் தோவுகளை எழுத விரும்பும் மாணவா்கள் அதற்கேற்ப முழு பாடத்தையும் படித்து தோவுக்கு தயாராக வேண்டும்.
மேலும், பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறதோ அந்த நேரத்தில் மாணவா்களுக்கு 50 நாள்களுக்கு ஏற்கெனவே கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும் நடத்திய பாடங்களை மீண்டும் ஒருமுறை நினைவூட்டப்படும்.