சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை தொடங்கியது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கட்டணம் கட்டி, பொறியியல் படிப்புக்கான விண்ணப்பத்தை நிரப்பிக்கொள்ள வசதி செய்யப் பட்டுள்ளது.
ஆனால், பி.இ. படிப்புக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை எதிர்த்து வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இந்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.