
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை முதலிடம்; சிவகங்கை மாவட்டம் 98.5% தேர்ச்சியுடன் 10 ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் 94.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ள நிலையில் தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் 2ம் இடத்தையும் விருதுநகர் மாவட்டம் 3ம் இடத்தையும் பிடித்துள்ளன. 5456 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன_
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 96.4%, மாணவர்கள் 92.5% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
காலை 9.30 மணிக்கு இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
மாணவ, மாணவிகளின் மதிப்பெண்களுடன் விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு தேவையான ஆலோசனை வழங்க பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் இந்த சுட்டியைப் பயன்படுத்தி.. முடிவுகளை அறிந்து கொள்ளலாம்..
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: உங்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ள…
- இந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 94.5%
- கடந்த ஆண்டை விட 0.1% தேர்ச்சி அதிகரிப்பு
- 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 5,584
- மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 3 சதவீதம் உயர்வு
- 98.5% தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டம் முதலிடம்
- ஈரோடு மாவட்டம் 2ஆம் இடம்; விருதுநகர் மாவட்டம் 3ஆம் இடம்
- தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் 28ஆம் தேதி மறுத்தேர்வு எழுதலாம்



