சென்னை: தமிழக அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் எல்கேஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத இடங்களில் கல்வி கட்டணமின்றி மாணவர்களைச் சேர்க்க வேண்டும்.
இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருக்கும் குழந்தைகளுக்கு இன்று (மே 28) குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெற உள்ளது.
அந்தந்த பள்ளிகளில் பெற்றோர், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள் முன்னிலையில் இன்று குலுக்கல் நடைபெற்று, மாணவர் சேர்க்கை நடைபெறும்.




