ஏபிவிபி., போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி! நெல்லை பல்கலை வருகை பதிவு அபராதக் கட்டணம் குறைப்பு!

Published:

nellai university abvp students met vc - 2026நெல்லை: நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நிகழும் முறைகேடுகள் குறித்து கவனத்துக்குக் கொண்டு வந்து, முறைகேடுகளை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு, அக்.15 முதல் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.

ஏபிவிபி., விடுத்த கோரிக்கைகள்…
• வருகைப் பதிவு அபராதக் கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.500 அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும்
• வருகைப் பதிவு தொடர்பான புதிய கட்டுப்பாடுகளை சரி செய்ய வேண்டும்
• இதுவரை தமிழில் தேர்வெழுதிய இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மீண்டும் தமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்.
• செனட், சிண்டிகேட் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மான நகலை பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிட வேண்டும்
• மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியன கட்டண (common fees structure) முறையை அமல்படுத்த வேண்டும்
• ONE SUBJECT ONE TEACHER என்ற பல்கலைக்கழக விதிமுறையை உடனே அனைத்து கல்லூரிகளிலும் நடைமுறைப் படுத்த வேண்டும்
• திருமாவளவனின் ஆய்வுக் கட்டுரையை ரத்து செய்ய வேண்டும்… உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி, கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களில் அக்டோபர் 15 முதல் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது!
– என்று ஏபிவிபி மாநில இணைச் செயலாளர் எம்.பிரித்விராஜன் வெளியிட்டள அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

இந்நிலையில், மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்த நெல்லை பல்கலை துணைவேந்தர், இது குறித்துப் பேச வருமாறு கூறியிருந்தார்.

அதன்படி, நெல்லை பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கரனை ஏபிவிபி மாணவர் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் பிரித்விராஜன் உள்ளிட்ட மாணவர் குழுவினர் சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர்.

அப்போது, மாணவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறிய துணைவேந்தர், வருகைப் பதிவு அபராதத் தொகை கட்டணத்தைக் குறைத்துக் கொள்வதாக உறுதி அளித்தார். மேலும், ஒரு பாடம் ஓர் ஆசிரியர் – என்ற முறையை பல்கலை.,யின் அனைத்து உறுப்புக் கல்லூரிகளிலும் நடைமுறைப் படுத்த ஆவன செய்வதாகவும், இதனை நடைமுறைப் படுத்தாத கல்லூரிகள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தெரிவித்தார்.

ஏபிவிபி அமைப்பு கூறியிருந்த கோரிக்கைகளில், திருமாவளவன் குறித்த அம்சத்தைத் தவிர மற்ற அனைத்தையும் பரிசீலிப்பதாகக் கூறினார். மேலும், திருமாவளவன் குறித்த ஆய்வு நூல் வந்த பின்னர் அது குறித்து பேசலாம், அதற்கு முன் தேவையற்ற சர்ச்சைகள் வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட துணை வேந்தர், உடனே பல்கலைக் கழக பதிவாளரிடம் சுற்றறிக்கை அனுப்பவும் ஏற்பாடு செய்தார்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

nellai university circular - 2026

அதன்படி, சுற்றறிக்கை அனைத்து உறுப்புக் கல்லூரிகளுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. அதில், வருகைப் பதிவு அபராதத் தொகை ரூ.500 என்று அறிவிக்கப் பட்டதில் இருந்து ரூ.200 ஆகக் குறைக்கப் பட்டுள்ளது. இது, நவ.2018ல் இருந்து நடைமுறைப் படுத்தப் படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை அறிவிப்பு, ஏபிவிபி., மாணவர் அமைப்பின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img