December 5, 2025, 2:28 PM
26.9 C
Chennai

சபரிமலையைக் காக்க அனைத்துக் கட்சியினரும் போராட வேண்டும்: இந்து மக்கள் கட்சி!

Ayyappa Swamy - 2025

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்திற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் போராட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழகம் வேண்டுகோள் விடுக்கிறது.

ஆண்கள் பெண்கள் பேதமில்லாது சபரிமலை அய்யப்பன் கோவிலில் வழிபாடு செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பானது உலகம் முழுவதும் உள்ள சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மட்டுமல்ல ; இந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ,மனவேதனையை உண்டாக்கி இருக்கிறது. மத நம்பிக்கைகளில் பிற மத வழிபாட்டு முறைகளில் தலையிட மறுக்கக்கூடிய நீதித்துறையானது ,

குறிப்பாக இந்துக் கோவில்களில் மட்டும் தலையிட்டு ஆண்டாண்டு காலமாக இருந்து வரக்கூடிய நடைமுறைகளை சிதைக்கக்கூடிய வேலையாக இருக்கலாம் என சிந்திக்க வைக்கிறது. சபரிமலையை காப்போம் சம்பிரதாயங்களை காப்போம் என கோஷங்களை முன்வைத்து சாமியே சரணம் ஐயப்பா என்று மனதார பக்தி கோஷங்களை எழுப்பி வீதிகளிலே வந்து போராடக் கூடிய மாபெரும் ஐயப்ப பக்தி புரட்சி போராட்டமாக வடிவெடுத்திருக்கிறது.

இந்து சமய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு கோவிலுக்கென்று ஒவ்வொரு வழிபாட்டு முறை இருக்கிறது. ஒரே கோவில் ,வழிபாட்டு முறையை அனைத்து கோவில்களிலும் செயல்படுத்த நினைப்பது என்பது ஏற்றுக்கொண்ட இயலாதது.

உதாரணமாக காசி விசுவநாதர் ஆலயம் இருக்கிறது அங்கு பக்தர்கள் அனைவரும் சென்று கருவறையில் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்ய முடியும் அதே நடைமுறையை நாடு முழுக்க செயல்படுத்த முடியுமா?

தமிழகத்தில் மட்டுமல்ல பல இடங்களில் ஆண்கள் மட்டுமே செல்லக்கூடிய திருக்கோவில் இருக்கிறது. பெண்கள் மட்டுமே வழிபாடு செய்யக் கூடிய திருக்கோவில் இருக்கிறது, பல்வேறு விதமான வழிபாட்டு முறைகளில் மாறுபட்டு இருந்தாலும் கூட பக்தி ரீதியாக இந்து சமயம் நம்மை ஒருங்கிணைக்கிறது.

நான் இதை ஏன் சொல்லுகிறேன் என்று சொன்னால் இந்த சமுதாயம் பல மாறுதல்களை உண்டாக்கும். இருந்தாலும் கூட நாடு முழுக்க பல ஐயப்பன் திருக்கோவில் இருக்கிறது. அங்கு ஆண் பெண் பேதம் இல்லாத அனைவரும் சென்று வழிபாடு செய்கிறார்கள் . ஆனால் சபரிமலை சாஸ்தா வழிபாடு என்பது நைஷ்டி க
பிரம்மச்சரியம் ,நித்திய பிரம்மச்சாரி.

சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் இப்படித்தான் என்று ஐயப்பனே வகுத்து வைத்து இருக்கிறான் . அந்த வழிபாட்டு முறைகளை சிதைக்க வேண்டி நீதித்துறை தலையிடுமேயானால்  அது ஒட்டுமொத்த இந்து சமுதாய மக்களின் நம்பிக்கையையும் கேள்விக்குறியாக மாற்றி சிதைக்கக்கூடிய செயலாகவே நாங்கள் எண்ணுகிறோம்.

சபரிமலை காப்போம்  ஆண்டாண்டு காலமாக சபரிமலையில் உள்ள பூஜை விதிமுறைகளை அமல்படுத்துவோம் என்று கேரளத்தில் ஒரு ஐயப்ப பக்தி புரட்சி போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது . இந்த போராட்டத்தில் ஆண் பெண் பக்தர்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஐயப்ப பக்தி புரட்சிப் போராட்டத்திற்கு கேரளத்தில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள் ; மட்டுமல்ல வீதிகளில் இறங்கி அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல தமிழகத்தில் சபரிமலை சாஸ்தா ஐயப்பன் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி சுமந்து செல்லக்கூடிய அனைத்து பக்தர்களும் வீதியில் இறங்கி போராட பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறது. பிற மதத்தவர்களுக்கு ஒரு பிரச்சினை என்று சொன்னால் வீதிகளில் இறங்கி போராடக்கூடிய தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் சபரிமலை அய்யப்பன் விஷயத்தில் சபரிமலையை காப்பதற்காக பெரும்பான்மை இந்து சமுதாய மக்களின் இந்து மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீதித்துறையானது,

இந்து மத நம்பிக்கையில் தலையிடக் கூடாது என்று சொல்லி சபரிமலையை காத்திட ஆதரவை தெரிவிக்கும் விதமாக வீதியில் இறங்கி போராடுவது தொடங்க வேண்டும் .

சபரிமலை ஐயப்பன் விஷயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து மத்திய அரசுக்கும், நீதித்துறைக்கும் ஒரு அழுத்தத்தைக் கொடுக்க கூடிய வகையிலே போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். – என இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் வேண்டுகோள். முன்வைக்கின்றோம்.

அதுமட்டுமல்லாது பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பாராளுமன்றத்தை அவசரமாகக் கூட்டி மத நம்பிக்கைகளில் நீதித்துறையானது தலையிடக்கூடாது என ஒரு சிறப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும். இது அவசரமும் அவசியமும் கூட

தமிழகத்தில் சபரிமலையை காத்திட ஐயப்ப பக்தி புரட்சிப் போராட்டம் அனைத்து இடங்களிலும் பரவ வேண்டும். இன்று இந்த சமுதாயம் வீதிக்கு வந்து போராட விட்டால் நாளை இந்த சமுதாயம் வீதிக்கு வந்துவிடும் என்கிற நிலை உருவாகும் .

ஆகவே சபரிமலையை காத்திட கட்சி பேதமின்றி ,ஜாதி பேதமின்றி, மொழி இன ,பேதமின்றி அனைவரும் ஐயப்ப பக்தர்கள் என்கின்ற அடிப்படையில் ஒரு அணியில் திரண்டு வெற்றி பெறும் வரை போராடுவோம் என இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் .

இதற்காக வரக்கூடிய 13ஆம் தேதி ஒரே நேரம் ஒரே சரணகோஷம் என்ற பக்தி போராட்டத்தை இந்து மக்கள் கட்சி முன்னெடுக்கிறது . இதில் அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றோம்.

சாமியே சரணம் ஐயப்பா
சரண கோஷம் ஒலிப்போம்
சபரிமலை காப்போம்

ராம. ரவிக்குமார்
(கட்டுரையாளர்: மாநில பொதுச்செயலாளர், இந்து மக்கள் கட்சி, தமிழகம்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories