January 14, 2025, 6:22 PM
26.9 C
Chennai

இங்கிதம் பழகுவோம்(30) – பெண் நிர்வாகம்!

எதிராளியின் உணர்வுகளை அதிகம் புரிந்துகொள்ளும் திறனும், அதற்கேற்றாற்போல செயல்படும் ஆளுமையும் ஆணை விட பெண்ணுக்கு கொஞ்சம் அதிகம்.  இது பெண்களுக்கு இயற்கைக் கொடுத்த வரம்.

இந்த வரத்தை சரியாக பயன்படுத்துவதும், தவறாகப் பயன்படுத்துவதும் பெண்களின் தனிப்பட்ட சுபாவம். பொதுமைப்படுத்த முடியாது.

2007-ம் ஆண்டு என் பெற்றோர் பெயரில் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ அறக்கட்டளையைத் தொடங்கியபோது சென்னை வாணி மஹாலில் ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’என்ற  தலைப்பில் என் பெற்றோரின் வாழ்க்கையை 1-1/2 மணிநேர ஆவணப்படமாக வெளியிட்டோம்.

அந்தப் படத்தை நான் தயாரித்ததோ அறக்கட்டளை தொடங்கப் போவதோ முன்கூட்டியே என் பெற்றோருக்குத் தெரியாது. சர்ப்ரைஸ்.

நிகழ்ச்சிக்குக் கூடுதல் சர்ப்ரைஸாக உறவினர்களையும், அப்பா அம்மாவின் அலுவலக நண்பர்களையும் அழைத்திருந்தேன். அதில் அப்பா அம்மா இருவருக்குமே அளவிலா ஆனந்தம்.

இதெல்லாம் பெரிய விஷயம் அல்ல.

இந்த ஆவணப்படத்தில் எனக்கு  அசிஸ்டென்ட்டாகப் பணியாற்றியவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தேன்.

சொந்த ஊர்  கும்பகோணத்துக்கு அருகில் உள்ள  ஒரு கிராமம். என் நிறுவனத்தில் அனிமேஷன் பிரிவில் பல வருடங்கள் பணியாற்றியவர். ஒருமுறை அலுவலக மீட்டிங்கில், அவர் அப்பா குடிக்கும் வழக்கம் உள்ளவர் என்றும்,  அம்மாவும் அப்பாவும் சேர்ந்து எங்கேயும் வெளியில் சென்று தான் பார்த்ததே இல்லை எனவும் தன் குடும்பச் சூழலை சொல்லியிருந்தார்.

ALSO READ:  டோலி.. டோலி... முன்னாள் விவசாயிகளின் மறுபக்கம்!

அவரது பெற்றோரை அவருக்குத் தெரியாமல் சென்னைக்கு வருவதற்கும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தேன்.

விழாவின் முடிவில் ஆவணப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் தகுந்த மரியாதை செய்தேன். என் அசிஸ்டென்ட்டுக்கு, அவர் அப்பா அம்மாவை மேடைக்கு அழைத்து அவர்கள் முன்னிலையில் ‘Best Visualizer’ என்ற விருதளித்து கவுரவித்தேன்.

அந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை, ஆவணப்படம் இவை எல்லாவற்றையும் விட பார்வையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது எது தெரியுமா? என் அசிஸ்டென்ட்டின் பெற்றோரை(யும்) சர்ப்ரைஸாக வரச் செய்து அவர்கள் முன்னிலையில் விருதுகொடுத்த சம்பவம்தான்.

ஒரு நிர்வாகி ஆணாக இருக்கும்பட்சத்தில் அவன் தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொடுக்கலாம், செய்கின்ற வேலைக்கு வெகுமதிகள் கூட்டித் தரலாம், கிஃப்ட்டுகளும் பார்ட்டிகளும் கொடுத்து அசத்தலாம். ஆனால் இப்படி அவர்களை உணர்வுப்பூர்வமாக அணுகி இருக்க முடியுமா என்பது சந்தேகமே.

– காம்கேர் கே. புவனேஸ்வரி

கட்டுரையாளர் குறித்து…

ALSO READ:  தீபாவளி ஸ்பெஷல்: சென்னையில் இருந்து குமரி, செங்கோட்டைக்கு ரயில்கள்!
This image has an empty alt attribute; its file name is bhuvaneswari-compcare.jpg

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/ http://compcaresoftware.com/  

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முட்டாள்தனமான முதலாளித்துவம்!

இவ்விதம் நன்றி பாராட்டுவது நம் பாரம்பரியம். முதலாளிமார்களே, உங்களுக்குத் தொழிலாளிகளே அத்தகைய தெய்வம். அவர்களுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும்

பஞ்சாங்கம் ஜன.14- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பிரதமர், ஆளுநர் தமிழில் பொங்கல் வாழ்த்து!

பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது என்பது வள்ளுவன் வாக்கு.

தேவகோட்டை பள்ளியில் தேசிய இளைஞர் தினம் போட்டிகள்!

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழாவினையொட்டி நடைபெற்ற ஓவியம் வரைதல் மற்றும் விவேகானந்தரின்

மதுரை கோயில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராசருக்கு சிறப்பு பூஜைகள் அதிகாலை நடைபெற்றது.