10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

20 May 22 10 result - 2026

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30க்கு வெளியாகின. இதில், திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி வீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது.

கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு த் தேர்வினை மாணவர்கள் எழுதினர். அவற்றின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில், மாணவர்கள் 93.3 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல், மாணவர்களை விட அதிக அளவாக, மாணவிகள் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 6100 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

இந்த முடிவுகளின் படி, திருப்பூர் மாவட்டம் தேர்ச்சியில் 98.3 சதவீதம் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. மாநிலத்தில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாவட்டங்களில்…
திருப்பூர் 98.53%
ராமநாதபுரம் 98.48%
நாமக்கல் 98.45%.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: பாடவாரியான தேர்ச்சி விகிதம்:

மொழிப்பாடம் : 96.12%
ஆங்கிலம்: 97.35%
கணிதம்: 96.46%
அறிவியல்: 98.56%
சமூக அறிவியல் : 97.07%

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.