ஆண்டவன் தேர் வெட்ட வெளியில் இருக்க… அதிகாரிகள் கார் கொட்டகையில் உள்ளது என்று கூறி, கோயிலின் திருத்தேரினைப் பாதுகாக்க கொட்டகை அமைக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்து தமிழர் கட்சி நிறுவனர் தலைவர் ராம.ரவிக்குமார் நம்மிடம் கூறியவை..
“ஆ வெனும் பசுவது தாவியுனை பூசிக்க,”அந்த நாள் சுந்தரபாண்டியன் அவ்வழி மார்க்கமாய் வந்து தான் பார்க்கையில் ஆவி கல்லில் ஓடவே, அருமை பெரு இந்நகர் #கல்லோடாவி என அமைத்தனன் நாமதேயம். அன்பர் புகழ் உன்பர் மகிழ் கல்லோடாவி வாழ் அனந்தீஸ்வர லிங்க சிவமே.,, என்று போற்றப்பட்ட சுவாமி அனந்தீஸ்வரர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் #பேர்பெரியான்குப்பம் கிராமத்தில் உள்ள அபிதகுசலாம்பாள் உடனுறை அனந்தீஸ்வரர் ஆலயம் பழமை வாய்ந்த தலம். 11ஆம் நூற்றாண்டில் சுந்தர பாண்டியன் என்ற மன்னன் காலத்தில் அவரால் எழுப்பப்பட்ட ஆலயம் இது..
சுந்தபாண்டியன் இங்கு வரும்போது அடர்ந்தவனமாய் இருந்த இந்த இடத்தில் குளம் இருந்ததை கண்டார். களைப்பாறலாம் என குளிக்க சென்றார், அவர் ஏற்கனவே குஷ்டரோகத்தால் அவதியுற்றவர்… குளித்து முடிந்ததும் உடலில் மாற்றம் கண்டார் தீராத நோய் என கருதிய குஷ்டரோகம் அங்கே புனித நன்னிராடியதால் நீங்கக் கண்டார்.
மணம் மகிழ்ந்து எப்படி இந்நிகழ்வு என யோசித்த போது குளத்தின் அருகே பசு ஓன்று சிவலிங்கத்தின் மீது தானாக பால் சொரிந்தது. இறைசக்தியை உணர்ந்த அவர், அங்கேயே லிங்க ரூபத்தை வழிபட்டார்!
பால் சொரிந்தபோது சிவலிங்கத் திருமேனியின் மேல் ஆவியாய் பறந்ததை பார்த்து இவ்வூருக்கு “கல்லோடாவி” என பெயர் சூட்டினார். தற்போது பேர்பெரியான்குப்பம் என அழைக்கப்படும் அழகிய கிராமம் இது.
அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயிலாக இப்போது இந்த ஆலயம் திகழ்கிறது. இங்கு திருத்தேர் அமைத்திருக்கிறார்கள். ஆனால் அது வெயிலில் மழையில் இருக்க.. பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஆனால் அறநிலையத்துறை அலுவலரின் காரோ பாதுகாப்புடன் கொட்டகையில் இருக்கிறது.
இதை சுட்டிக் காட்டி, மனிதன் பயனிக்கும் சாதரண நான்கு சக்கர வாகனத்திற்கு ஒரு கட்டிடம்? அந்தக் வாகனம் வீணாகாமல் இருக்க ஒரு மேற்கூரை அமைத்து பாதுகாக் கிறோம். அகிலத்தையே ஆட்டிப் படைக்கும் ஆதிநாதன் பயணிக்கும் திருத்தேரை தெருவில் விடுவதா? என்று குமுறுகிறார்கள் பக்தர்கள். 
இங்கே முற் காலத்தில் சிதம்பரத்திற்கு சுரங்கப் பாதை இருந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 100 ஏக்கர் நிலம் கோவிலுக்கு சொந்தமாக உள்ளது.
அங்கே விசாரித்ததில், பழைய தேர் சிதிலமடைந்து விட்டதால் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல்; கிராமப் பொதுமக்கள் ஒன்று கூடி ஒரு புதிய #தேர் ஒன்றை தாமே செய்வதென்று தீர்மானித்து, சில நல்ல உள்ளங்களிடம் பெருவாரியான
#மரங்களை வசூலித்து மிகவும் கடினப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக மரங்களை சேகரித்து வெற்றிகரமாக புதிய தேரை ஆகம முறைப்படி செய்து வெள்ளோட்டம் விழா முடிந்து பிரதி வருடம் #சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பாக தேர்பவனி நடைபெறுகிறது .
சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த புதிய திருத்தேர் #வெயில் #மழை என வெட்டவெளியில் கிடக்கிறது. அதனால் அந்தத் தேர் விரிசல் விட ஆரம்பித்துள்ளது. உடனே தேர் #கொட்டகை அமைத்து பாதுகாக்காவிட்டால் பல லட்சம் பொருட் செலவில் செய்த அந்தத் தேர் பயனற்றுப் போய்விடும்… என்று உள்ளம் குமுறி புகார் கூறுகின்றனர் பக்தர்கள்.
அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கள் வீட்டு சிறிய காரையோ, அல்லது இருசக்கர வாகனத்தையோ இப்படி நடுத்தெருவில் 5 ஆண்டுகள் விடுவார்களா என்று கேள்வி எழுப்பும் பக்தர்கள், தேரை துளைத்து புற்றுத் தேன் கட்டும் அளவில் வைத்திருக்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.




