நீங்க விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்றவரா? தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேரலாம்!

கல்வி தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

gomathi gold medalist - 2026

தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டங்களிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இலவச விளையாட்டு விடுதிகளை நடத்தி வருகிறது. இந்த விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பபட்டுள்ளது.

யார் இதில் சேரலாம்? வரும் கல்வி ஆண்டில் ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு படிக்க இருக்கும், விளையாட்டில் ஆர்வமுடைய இரு பால் மாணவர்களும் சேரலாம்.

மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள்: மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல்

மாணவியருக்கான விளையாட்டு விடுதிகள்: ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை.

மேற்கண்ட விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு வரும் 08.05.2019 முதல் 10.05.2019 வரை நடைபெற உள்ளது.

மாணவர்களுக்கான விளையாட்டுகள் : 1. தடகளம், 2. இறகுப்பந்து, 3. கூடைப்பந்து, 4. குத்துச்சண்டை, 5. கிரிக்கெட், 6. கால்பந்து, 7. வாள்சண்டை, 8. ஜிம்னாஸ்டிக்ஸ், 9. கைப்பந்து, 10. வளைகோல்பந்து, 11. நீச்சல், 12. டேக்வோண்டோ, 13. கையுந்துப்பந்து, 14. பளுதூக்குதல், 15.கபடி, 16. மேசைப்பந்து, 17. டென்னிஸ், 18. ஜூடோ, 19. ஸ்குவாஷ், 20. .வில்வித்தை

மாணவிகளுக்கான விளையாட்டுகள் : 1. தடகளம், 2. இறகுப்பந்து, 3. கூடைப்பந்து, 4. குத்துச்சண்டை, 5. கால்பந்து, 6. வாள்சண்டை, 7. கைப்பந்து, 8. வளைகோல்பந்து, 9. நீச்சல், 10. டேக்வோண்டோ, 11. கையுந்துப்பந்து, 12. பளுதூக்குதல், 13.கபடி, 14. டென்னிஸ், 15. ஜூடோ, 16. ஸ்குவாஷ்

மேற்கண்ட விளையாட்டு போட்டிகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்விளையாட்டுகளில் ஆர்வமுள்ள மாணவர்களும் சேரலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பித்த மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்கில், மாணவர்களின் உடற்திறன், விளையாட்டுத்திறன் சோதிக்கப்படும். இதன் அடிப்படையில் மாணவர்கள் இந்த விடுதிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
பயிற்சி இலவசம். உணவு இலவசம். தங்குமிடம் இலவசம். இந்த விடுதிகளுக்கு அருகில் இருக்கும் சிறந்த பள்ளியில் மாணவர்கள் படிக்க வைக்கப்படுவர். அப்பள்ளியின் படிப்பக் கட்டணத்தை மட்டும் பெற்றோர்கள் செலுத்த வேண்டி இருக்கும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.05.2019

மாவட்ட அளவில் தேர்வு நடைபெறும் தேதிகள்: 08.05.2019 முதல் 10.05.2019 வரை.

விவரங்களுக்கு: https://www.sdat.tn.gov.in/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.