நீட் நுழைவுத் தேர்வு நாளை மே-5ல் நடைபெறுகிறது. .இந்நிலையில் சிலருக்கு நீட் தேர்வு மையங்கள் மாற்றப் பட்டுள்ளதாக குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நீட் தேர்வு மையமாக தற்போதும் செயல்படுகிறது. தேர்வு மைய எண் : 411309. இம் மையத்தில் வரிசை எண்:410608041 to 410608640 எழுதும் 600 மாணவர்கள் மட்டுமே மதுரையில் உள்ள தேர்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்
எண்: 411305461 முதல் 411305940 வரை உள்ள மாணவர்கள் தேர்வினை புஷ்பலதா மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மொத்த மாணவர்கள் : 480
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீதமுள்ள நீட் தேர்வு மையங்களில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெல்லை மாவட்ட பிஆர்ஓ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மதுரை நீட் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளன. தேர்வுக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், உங்கள் பகுதியில் யாரேனும் மதுரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதுபவராக இருந்தால் அவர்களுக்கு இந்தத் தகவல் பயனுள்ளதாக இருக்கும்.




