தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்!
அவர் நேற்று காலை நடுகூட்டுடன்காடு மறவன் மடம், அந்தோணியார் புரம் ஆகிய பகுதிகளில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்!
அந்தோணியார்புரத்தில் மக்களை சந்தித்து ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது அங்கே சிலர் அவருக்கு பனை ஓலைப் பட்டையில் பதநீரை அளித்தனர்! முக ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் அதனைக் கையில் எடுத்து மிகவும் ருசித்து குடித்தனர்.
பின்னர் அவர் பதனீரைக் கொடுத்தவர்களிடம் இந்த பதநீர் ரொம்ப டேஸ்டா இருக்கு நல்ல இனிப்பா இருக்கு இதில் சர்க்கரை போட்டு உள்ளீர்களா? என்று கேட்டார்.
அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த அந்த மக்கள், பனையில் இருந்து வடித்து எடுக்கும் போதே பதநீர் இனிப்புடன் தான் இருக்கும்; இதனுடன் சுண்ணாம்பு மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் தமிழகத்தில் பனை மரக் காட்டில் பிரசாரம் மேற்கொண்டு வரும் மு க ஸ்டாலின் பதநீரில் சர்க்கரை போட்டு இருக்கிறதா என்று கேள்வி கேட்டது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
உடன் இருந்த திமுக தொண்டர்கள் தலைவர் என்ன வேற்று கிரகவாசியா என்று ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டனர்!



