11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

கல்வி சற்றுமுன் தமிழகம்

19 May28 SSLC result - 2026

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் 11ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடந்தது.

சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளனர்.

இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு 11ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

தேர்வு முடிவுகளை www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் செல்போன் எண்ணிற்கும் குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.