ஜூன் 3 ம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றம் இல்லை: செங்கோட்டையன்!

Published:

sengottaian - 2026

பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படும் அதில் மாற்றம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

முன்னரே அறிவித்தபடி வரும் ஜூன் 3 அன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்; அதில் மாற்றம் ஏதும் இல்லை என்று என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கோடைக்காலம் முடிந்து வரும் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால், தமிழகத்தில் வெயிலின் கடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என்று பரவலாக செய்திகள் உலவின.

எனவே பள்ளிகள் திறப்பு ஜூன் 3 வது வாரத்திற்கு தள்ளிப்போகலாம் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்க்கு ஏற்பட்டது. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் ‘ஏற்கெனவே அறிவித்தபடி வரும் ஜூன் 3 அன்று பள்ளிகள் திறக்கப்படும். அதில் மாற்றம் இல்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

Related articles

Recent articles

spot_img