spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்உயிரி ஆயுதப் போர்! மீண்டு விட்டதாகக் கூறிக் கொள்ளும் சீனாவின் மறுபக்கம்!

உயிரி ஆயுதப் போர்! மீண்டு விட்டதாகக் கூறிக் கொள்ளும் சீனாவின் மறுபக்கம்!

- Advertisement -

நால்வகைப் பேரழிவு ஆயுதங்களுள் கதிரியக்கப் போர், அணுஆயுத போர் மற்றும் வேதியியல் போர், ஆகியவைகளோடு உயிரியல் போர் முறையும் ஒன்று. உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்துவது உலகளவில் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துவது போர்க் குற்றமாக கருதப்படும்‌.

சீனாவின் வூஹான் நகரின் ஹுவானான் (Huanan) கடலுணவுச் சந்தை மிக பெரியது. கடல் விலங்குகள் மட்டுமல்லாது பல்வேறு காட்டு விலங்குகளும் அங்கே விற்கப்படுகின்றன. தடை செய்யப்பட்ட விலங்குகளும் உயிரோடோ அல்லது இறைச்சியாகவோ சட்ட விரோதமாக விற்கப்பட்டு வந்தன.

இந்த சந்தையில், வௌவால்கள்,பாம்புகள், சில்வண்டுகள், பன்றிகள், ஆமைகள், தேன் வளைக்கரடி , புனுகுபூனைகள், அழுங்கு என்று சொல்லப்படும் எறும்புண்ணிகள், முள்ளம்பன்றிகள், ஓநாய் குட்டிகள், மற்றும் முதலைகள் இவைகளோடு மீன்கள், ஆடுகள், நண்டுகள் ஆகியவை விற்கப்பட்டு வந்தன. நவம்பர் 2019 இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்திலிருந்து இங்கிருந்து தான் கொரோனா தொற்று பரவியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

2002 ம் ஆண்டு சீனாவின் குவாங்டான் மாகாணத்தின் ஒரு கடலுணவு சந்தையிலிருந்து தான் மிக பெரிய அளவில் ‘தீவிர கடிய மூச்சியக்க கூட்டறிகுறி’ SARS (Severe acute respiratory syndrome) பரவியது. பல ஆயிரம் பேரை பலிவாங்கிய இந்த தொற்று, உலகம் முழுவதும் பரவி பெரும் சீரழிவை ஏற்படுத்தியது. அந்த நேரத்திலும் சீனா இந்த தொற்று குறித்து உலகிற்கு தெரியப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் இருந்த ஒரு உலக சுகாதார நுண்ணறிவு நிறுவனம் தான் இதை இணையதளத்தின் மூலம் கண்டறிந்து உலக சுகாதார நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியது.

வெளிநாடுகளிலும் இது பரவியது. வௌவால்களினாலோ, புனுகுபூனைகளினாலோ, வேறு சில விலங்குகளிலிருந்து இது பரவியிருக்கலாம் என கூறப்பட்டது. அதன் பிறகு பல ஆராய்ச்சிகளுக்கு பிறகே இதற்கான தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் இந்த தொற்று பரவுவது தடுக்கப்பட்டது.

இதையடுத்து, அப்போதிருந்தே சீனா, ஆபத்தான நோய்கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும் நுண்ணுயிர் உயிரியல் ஆய்வுகூடங்களை (BSL-4) அமைக்க திட்டமிட்ட நிலையில், 2017ம் ஆண்டு வூஹான் நகரில் சுமார் 331 கோடி செலவில் ஒரு ஆய்வுகூடத்தை உருவாக்கி முடித்தது. இந்த ஆய்வுகூடம் அமைக்கப்பட்டதில் இருந்தே இதர நாடுகளை சேர்ந்த பல்வேறு ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் இதை ஆபத்தானது என்றே சொல்லிவந்தது குறிப்பிடத்தக்கது. ‘விலங்குகளை வைத்து செய்யும் ஆராய்ச்சியில் நோய்க்கிருமிகள் தப்பித்து வெளியேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன’ என்று அச்சப்பட்டனர்.

ஆனாலும் சீனா இவைகளை காதுகொடுத்து கேட்கவில்லை. அதே ஆண்டு யுன்னான் மாகாணத்தில் ஒரு குகையில் கொரோனா தொற்று என்ற ஒரு தொற்றை கொண்ட குதிரைவாலி வௌவால்கள் கண்டறியப்பட்டன. இந்த வௌவால்களை அடிப்படையாக கொண்டே, அதன் மூலம் தான் வூஹானிலுள்ள ஆய்வு கூடத்தில் ஆராய்ச்சி நடைபெற்று வந்ததாக சொல்லபடுகிறது. இந்த ஆய்வுகூடத்திலிருந்து, கொரோனா தொற்று ஏற்பட்டதாக சொல்லப்படும் ஹுவானான் (Huanan) கடலுணவுச் சந்தை வெறும் 32 கிலோ மீட்டர் தொலைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உருவாகியிருக்கும் இந்த தொற்றானது அந்த ஆய்வுகூடத்திலிருந்து கசிந்திருக்கலாம் அல்லது அங்கு பணியாற்றும் அல்லது அங்கு சென்றவர்களிடமிருந்து தொற்றி இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. வூஹான் சந்தையில் இருந்த ஒரு 57 வயதான ஒரு மீன் விற்கும் பெண்ணிடம் தான் முதலில் பரவியதாக சொல்லப்படுகிறது.

விலங்கின ஆராய்ச்சியின் அடிப்படையில்
வௌவால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ பரப்பி இருக்கலாம் என்றும் இந்த கொரோனா தொற்றானது நேரடியாக குதிரைவாலி வௌவால்களிடமிருந்து அழுங்கு என்று சொல்லப்படுகிற எறும்புண்ணிகளிடமிருந்தோ கூட பரவியிருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.

இந்த அழுங்கு என்ற அரிய உயிரினம் விற்கப்படுவதோ, வளர்ப்பதோ அல்லது கொல்லப்படுவது தடை செய்யப்பட்ட ஒன்று என்றாலும், வூஹான் சந்தையில் தாராளமாக கிடைத்து வந்தது என்றும் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விலங்குகளை வைத்தே வூஹான் நுண்ணுயிர் உயிரியல் ஆய்வுகூடத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன என்பதை மறந்து விடக்கூடாது.

தெரிந்தோ, தெரியாமலோ, உலகத்தையே மிரட்டி கொண்டிருக்கும், கண்ணுக்கு புலப்படாத ஒரு கொடூர அரக்கனை தடுக்க முடியாமல் கையை பிசைந்து நின்றது சீனா. அந்த அலட்சியத்தின் விளைவால் இன்று உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் தங்களின் உயிரை கைகளில் பிடித்து கொண்டு பதட்டத்தின் உச்சியில் உள்ளனர். பொருளாதார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது உலகம்.

ஆனால், சீனாவோ தாங்கள் மீண்டு விட்டதாகவும், இதற்கு விரைவில் ஒரு தீர்வை, தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதாகவும் கொக்கரித்து கொண்டிருக்கிறது. கொடுங்கோல், ஃ பாசிச சீன கம்யூனிஸ்ட் அரசு உண்மையை மறைக்கிறது என்று பல தகவல்கள் உலவிக்கொண்டிருக்கின்றன. அங்கே தான் அப்படியென்றால் இங்கே தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள் தொலைக்காட்சிகளிலும், சமுக ஊடகங்களிலும் சீனாவை வானளாவ புகழ்ந்து தள்ளி, ஏதோ தொழில் நுட்ப அதிசயத்தை கையாள்கிறது சீனா என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி, சீனாவுக்கு தங்களின் விசுவாசாத்தை காட்டி கொண்டிருக் கின்றனர்.

சீனா மறுபடியும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டதாக அந்த அரசு சொல்வதை ‘கிளிப்பிள்ளை’ போல திருப்பி சொல்லி, கொரோனா தொற்றின் பிடியிலிருந்து மீள்வதற்கு உலகின் மற்ற நாடுகளை விட மிக சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்தியாவின் மத்திய,மாநில அரசுகளை விமர்சனம் செய்து கொண்டு மக்களை தூண்டி விட்டு சீனாவின் அடிவருடிகளாக செயல்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கதக்கது.

அக்டோபர் 2002 ல், அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.அ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள், ” இந்தியா உயிரியாயுதங்களை தயாரிக்காது. உயிரியாயுதம் மனித இனத்திற்கே பெருங்கேடு விளைவிக்கும்.” என்று கூறியதை எண்ணிப்பார்க்க தோன்றுகிறது.

நாம் வெல்வோம். மீள்வோம்.

  • நாராயணன் திருப்பதி.
    (செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe