spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொள்ள... அண்ணாமலை பாத யாத்திரையின் நிறைவு விழா! பல்லடத்தில் மோடி உற்சாக உரை!

லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொள்ள… அண்ணாமலை பாத யாத்திரையின் நிறைவு விழா! பல்லடத்தில் மோடி உற்சாக உரை!

- Advertisement -

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த என் மண் என் மக்கள் பாதை யாத்திரை நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். 

பல்லடத்தில் பிப்.27  இன்று நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவில் பேசினார் பிரதமர் மோடி. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “வணக்கம்” என தமிழில் பேசி உரையை தொடங்கினார்.

  • பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள்…
    தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கிறது.
  • பா.ஜனதாவில் வளர்ச்சி பார்த்து பலருக்கு அச்சம்.
  • தமிழகத்திற்கு 3 மடங்கு நிதியை பா.ஜனதா அரசு அளித்துள்ளது.
  • மத்திய அரசு தமிழக வளர்ச்சிக்கு எப்போதும் முக்கியத்தும் கொடுத்து வருகிறது.
  • ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் பெரிய அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் தமிழகத்திற்கு ஏதும் செய்யவில்லை. 10 ஆண்டுகள் அமைச்சர் பதவியில் இருந்து திமுக தமிழக அரசுக்கு ஏதும் செய்யவில்லை.
  • 1991-ல் நான் ஒற்றுமை யாத்திரை தொடங்கியபோது, கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினேன். கன்னியாகுமரி மண்ணை நெற்றியில் பூசிக்கொண்டு என்னுடைய யாத்திரையை தொடங்கினேன்.
  • என் மண், என் மக்கள் யாத்திரை தமிழகத்தை ஒரு புதிய பாதையில் எடுத்து செல்கிறது.
  • மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்
  • தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழகத்தை தன் இதயத்தில் பா.ஜனதா வைத்துள்ளது.
  • பல ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளை அடித்தவர்கள், பா.ஜனதாவின் வளர்ச்சியை பார்த்து பயப்படுகிறார்கள்.
  • தமிழக மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள்.
  • ஜவுளி துறையில் சிறப்பு வாய்ந்த நகராக திருப்பூர் உள்ளது.
  • நாட்டின் பொருளாதாரத்தில் கொங்கு பகுதி பெரும் பங்கு வகிக்கிறது.
  • நாட்டின் வளர்ச்சியில் இந்த பகுதி மிக முக்கியமானது.
  • இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது காவிக்கடலை பார்ப்பதுபோல் உள்ளது.
  • இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
  • 2024-ல் தமிழகத்தில் அதிகமாக பேசப்படும் கட்சி பா.ஜனதா.
  • என் மண் என் மக்கள் யாத்திரை தன்னுடைய பெயராலும் பெருமை பெற்றுள்ளது.
  • என் மண் என் மக்கள் யாத்திரைக்கு வரலாற்றில் இல்லாத அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது.
  • நாடுதான் முதன்மையானது என பா.ஜனதா கருதுகிறது.
  • இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துக்கள்.
  • தமிழ்மொழி, கலாசாரம் மிக சிறப்பானது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 

பல ஆண்டுகளாக தமிழகத்தைக் கொள்ளை அடித்தவர்கள், பாஜக.,வின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள். மத்திய பாஜக., அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. தமிழகத்திற்கு 3 மடங்கு நிதியை மத்திய பாஜக., அரசு வழங்கியுள்ளது. மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு திமுக எதுவும் செய்யவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெரிய அமைச்சரவைகளில் அமைச்சர்களாக இருந்தபோதும் திமுக எதுவும் செய்யவில்லை. தமிழகத்திற்கு 10 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக – காங்கிரஸ் கூட்டணி செய்ததை விட பல மடங்கு பாஜக., அரசு செய்துள்ளது. 

மோடி, அனைவருக்காகவும் பணியாற்றுகிறார்; ஏழைகளுக்காக பணியாற்றுகிறார்; தமிழகத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறார். இதுவே இந்த மோடியின் உத்தரவாதம். மோடியின் உத்தரவாதம் இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர இருக்கிறது.

நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள சிலர் பாஜக.,வின் வளர்ச்சியை தடுக்கின்றனர். இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்ஜிஆர். அதனால் அவர் இன்றும் நினைத்துப் பார்க்கப்படுகிறார். அவரைப் போலவே ஜயலலிதாவும் மக்கள் மனதில் நிலைப்பெற்றிருந்தார். எம்ஜிஆர் குடும்பத்திற்காக உழைத்தவர் அல்ல, மக்கள் நலனுக்காக பணியாற்றியவர்.

ஜெயலலிதா தமிழக மக்களோடு எந்த வகை தொடர்பு வைத்திருந்தார் என்பது எனக்கு தெரியும். தமிழகத்தில் திமுக.,வால் அரசியல் இழுக்கு ஏற்பட்டுள்ளது. வாரிசு அரசியலை எதிர்த்தவர் எம்ஜிஆர். அவரை அவமதிப்பது போல், திமுக ஆட்சி நடைபெறுகிறது. நாடு வளர்ச்சி அடையும் போது தமிழகமும் அதே வேகத்தில் வளர்ச்சி அடையும். 2 பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையங்களில், ஒன்று தமிழகத்திற்கு வருகிறது.

‘இண்டி’ கூட்டணி தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படுவதற்கான பணிகளை செய்ய மாட்டார்கள். இண்டியா கூட்டணியின் ஒரே நோக்கம், மோடியை வெறுப்பதே! குடும்ப ஆட்சியை எப்படி நடத்துவது என்பது பற்றியே சிந்திக்கிறார்கள். இண்டியா கூட்டணி தமிழகத்தில் வெற்றிப்பெற்றால் தமிழகத்தை வளர்ச்சியடைய அனுமதிக்க மாட்டார்கள். இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் இனிமேல் தேசத்தை சுரண்ட முடியாது.

முத்ரா கடன் வசதி திட்டம் மூலம் தமிழகத்திற்கு 2 லட்சம் கோடி கடனாக வழங்கப்ப்டடுள்ளது. மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறார். தமழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. பாஜக., தன்னுடைய 3வது ஆட்சி காலத்தில் வளர்ச்சியடைந்த இந்தியாவை இலக்காக கொண்டு பணியாற்ற உள்ளது.

தமிழகத்தை ஆளுகின்ற கட்சி, தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை தடுக்கிறது. இண்டியா கூட்டணி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டது. 2024ல் ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டுப்போட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். நீங்கள் தமிழகத்தின் பிரகாசமான வளர்ச்சிக்கு உத்தரவாதத்தை கொண்டு வந்துள்ளீர்கள். தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் முடிவெடுத்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, பல்லடம் அடுத்த மாதப்பூரில் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலையின் ‛ என் மண்: என் மக்கள்’ பாத யாத்திரை நிகழ்ச்சி நிறைவு விழா மற்றும் பாஜக., தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச, திறந்த வேனில் வந்தார்பிரதமர் மோடி. அவருக்கு லட்சக்கணக்கில் அங்கே திரண்டிருந்த மக்கள், கட்சித் தொண்டர்கள், மலர்களைத் தூவி, பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டு, மீண்டும் மோடி வேண்டும் மோடி என்று கூறி வரவேற்பு அளித்தனர்.

5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவுக்கு மாநாட்டுப் பந்தலில் இருக்கைகள் அமைக்கப்பட்டு, ஏற்பாடுகள் செய்யப்  பட்டிருந்தன. 500 அண்டாக்களில் உணவு தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கவும் உணவுசாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், வந்திருந்த கூட்டத்தினர் வரிசையாக வந்து நின்று பாக்கு மட்டை தட்டுகளில் உணவை வாங்கி உண்டு சென்றனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் வாகனங்களில் வந்திருந்த கட்சி தொண்டர்கள் மாநாட்டில் பந்தலுக்கு உள்ளே வர இயலாமல் இட நெருக்கடி காரணமாக வெளியிலேயே நிற்க வேண்டி இருந்தது.  பலர் கார்களில் இருந்த படி மொபைல் போன்கள் வாயிலாக நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். 

மாநாட்டு மேடைக்கு பிரதமர் மோடி வரும்போது அருகே கூட்டத்திலிருந்து தொண்டர்கள் மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்றனர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வந்த மோடியின் அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மத்திய அமைச்சர் எல் முருகனும் உடன் இருந்தனர். பிரதமர் மோடி வருவதற்கு முன்னதாக விழாமேடையில் பாஜக தலைவர்களுடன் கூட்டணி கட்சி தலைவர்களும் அமர்ந்திருந்தனர்.  அவர்கள் ஒவ்வொருவராக  எழுந்து வந்து மாநாட்டு மேடையில் பிரதமர் மோடியின் நலத்திட்ட பணிகள் பாஜகவின் வளர்ச்சி, அண்ணாமலை மேற்கொண்ட என்மன் என் மக்கள் பாதயாத்திரையின் வெற்றி ஆகியவை குறித்து பேசினர்.

விழா மேடையில் பிரதமர் மோடிக்கு எல்.முருகன், தோடர் பழங்குடியினர் தயாரித்த துண்டு ஒன்றை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து மோடிக்கு, ஜல்லிக்கட்டு காளை சிலையை, அண்ணாமலை பரிசாக வழங்கினார். தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு காங்கிரஸ் திமுக கூட்டணி அரசியல் தடை செய்யப்பட்டதும், பின்னர் வந்த பிரதமர் மோடி ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி தமிழர்களின் வீர விளையாட்டை மீட்டுக் கொடுத்ததன் அடையாளமாக இந்த பரிசை வழங்குவதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து கூட்டணிக் கட்சியினர்,  ஈரோட்டின் புவிசார் அடையாளமான  ஈரோட்டு மஞ்சள் மாலையை  பிரதமர் நரேந்திர மோடிக்கு அணிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe