December 6, 2025, 12:23 PM
29 C
Chennai

சோழவந்தான், மொடக்குறிச்சி ரயில்வே பாலங்கள்; பிரதமர் மோடி திறந்துவைப்பு!

railway bridgesopened - 2025

சோழவந்தானில்

சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மதுரை கோட்டத்தில், இரயில் நிலையம் மேம்பாட்டிற்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இதில், சாலை வாகன போக்குவரத்து பாதுகாப்பிற்கும், ரயில் கடந்து செல்லும் வரை நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், சோழவந்தான் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் சுமார் 49 கோடி செலவில் அமைக்கப் பட்டுள்ளது.

அந்த ரயில்வே மேம்பாலத்தை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இதற்கான காணொளி நிகழ்ச்சி விழா சோழவந்தான் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, பாஜக மாவட்டப் பொருளாளர் முத்துராம், ரயில்வே பள்ளி மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். மதுரை ரயில்வே கோட்ட உதவி கோட்ட பொறியாளர் முத்தையா வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், மதுரை ரயில்வே பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. பகல் 12. 20 மணியளவில் பாரதப் பிரதமர்மோடி காணொளி வாயிலாக சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து பேசினார். இதில், சோழவந்தான் ரயில் பயணிகள் நலச்சங்க உதவிச் செயலாளர் சுப்பிரமணியன், வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பாஜக நிர்வாகிகள் ஒர்க் ஷாப் முருகன், செந்தமிழன், செல்வி,ராஜா, வாசுதேவன், விஸ்வ ஹிந்து பரிஷத் முருகன், முருகேஸ்வரி,ரமேஷ், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ராஜேஷ், கருப்பணன் சோழவந்தான் பிராமணர் சங்க நிர்வாகிகள் வெங்கட்ராமன், காசி விஸ்வநாதன், நாகேஸ்வரன் ,சி. ஆர். பி. இன்ஸ்பெக்டர் ஜெயபிரிட்டோ, வக்கீல் பாண்டுரங்கன் உள்பட ரயில்வே பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிலைய கண்காணிப்பாளர் சுந்தர் கணேஷ் நன்றி தெரிவித்தார். சோழவந்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னன் மற்றும் போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.

மொடக்குறிச்சியில்

ரயில்வே நுழைவு பாலம் திறப்பு விழாவில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ:

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 41 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நாடு முழுவதும் 554 ரயில் நிலையங்களை மறுசீரமைத்தல் மற்றும் 1500 சாலை மேம்பாலம் / அடிப்பாலம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல் / துவக்கி வைத்தல் / நாட்டுக்கு அர்ப்பணித்தல் நிகழ்வினை காணொளி வாயிலாக மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இன்று (26.02.2024) துவக்கி வைத்தார்கள்.

அதன் அடிப்படையில் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட புஞ்சை காளமங்கலம் ஊராட்சி சின்னம்மாபுரம் மற்றும் நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி ஆர்.டி காலேஜ் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே நுழைவு பாலம் திறப்பு விழா இன்று (26.02.2024) திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் சாவடிப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

திறப்பு விழா நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார். நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி மற்றும் நமது கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் கொடுக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்வினை தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரயில் நிலைய பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

காரைக்குடியில்…

தில்லியில் இருந்து காணொளி வாயிலாக, அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.41 ஆயிரம் கோடி மதிப்பில், 554 ரயில் நிலையங்களை மறு சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இது தொடர்பான நிகழ்ச்சி காரைக்குடியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்தி எம்.பி., பேசுகையில்,‛‛ மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து நாம் ரூ.1 வரி கட்டினால், 29 காசு தான் திரும்ப வருகிறது. ஆனால், உத்தர பிரதேசத்தில் ரூ.1 கட்டினால் ரூ.2.73 திரும்ப கிடைக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பாஜக.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜக.,வினர் அரசு விழாவில் அரசியல் பேசக்கூடாது என்றும், உங்கள் குடும்பம் என்ன செய்தது என்றும் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பாஜக.,வினர் ‘மோடி வாழ்க’ என்றும் ‘கோ பேக் கார்த்தி’, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்றும் கோஷமிட்டனர். இதையடுத்து கார்த்தி எம்.பி., தனது பேச்சை முன்னதாகவே முடித்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories