சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; 2 வழக்கிலும் தலைமை நீதிபதி உறுதி..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

indira banarjee - 2026

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என அண்மைக்காலத்திய இரு வழக்குகளிலும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உறுதியுடன் இருந்துள்ளார். இன்றும் தனது உறுதியை 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியும், அதிமுக., எம்எல்ஏ.,க்கள் 18 பேர் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தனர். இதனால், அவர்கள் 18 பேரும் கொறடா உத்தரவை மீறியதாகக் கூறி, அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்த்ரவிட்டார் அவைத்தலைவர் தனபால்.

18mlas1 - 2026

இந்நிலையில் அவைத்தலைவரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதே நேரம், திமுக கொறடா சக்கரபாணியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கொறடா உத்தரவை மீறியதாக 18 எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டது போல் கடந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி எடப்பாடி அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களிக்காமல் விட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

18mlas - 2026இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் வந்த போது, ஏப்ரல் 27 அன்று அவர் அளித்த தீர்ப்பில், சபாநாயகரின் முடிவே இறுதியானது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறினார். இதனால், ஓபிஎஸ்., ஆதரவு 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில், அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி ஆனது. மேலும் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற கருத்தும் வெளிப்பட்டது.

எனவே, இன்று தீர்ப்பு வெளியான 18 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கிலும், தலைமை நீதிபதி இவ்வாறுதான் கூறுவார் என்று முன்னரே எதிர்பார்க்கப் பட்டது.

அது போல், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்று உறுதிபடக் கூறியுள்ளார். ஆனால் மற்றொரு நீதிபதி சுந்தரோ 18 பேரின் தகுதி நீக்கம் செல்லாது என்றார்.

இப்படி இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பை எதிர்நோக்கி, இந்த வழக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. ஒரே கட்சி, ஒரே விதமான வழக்குகள், ஒரே விதமான அணுகுமுறை, ஒரே விதமான தீர்ப்புகள் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் செயல்பாடு உறுதித் தன்மையுடன் பார்க்கப் படுகிறது.

1 thought on “சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; 2 வழக்கிலும் தலைமை நீதிபதி உறுதி..!”

  1. அரசியல் விளையாட்டு நீதியும் நீதிபதிகளும் சுதந்திரமாக செயல்படவில்லை குழப்பமே என்பது முதல்வி வழக்கு நீதி தீர்ப்பு தாமதமும் இந்த ௧௮ எம்.எல்.ஏ மாறுபட்ட தீர்ப்புகளும் மான்வேட்டை ,குடித்து காரோட்டியது,வெடிகுண்டு வைத்த சதியாலர்களுக்கு துணை போன வழக்கு அனைத்தும் நீதி மெல்ல மெல்ல சாகும் பண அதிகாரபலம் தான் வெல்லும் சட்டம் இருட்டறை என்பது உறுதியாகிக்கொண்டிருக்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.