
நெல்லை மாவட்டம் செங்கோட்டை மேலூர் பெரியசாமி தெருவில் பாலசக்தி விநாயகர் கோயில் அருகில் உள்ள செங்கோட்டை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான ஆழ்துளை கிணறு ஆபத்தான நிலையில் உள்ளது என்று நேற்று வாட்ஸ் அப் வாயிலாக ஒரு படத்தைப் பதிவு செய்திருந்தார்கள் செய்தியாளர்கள்.
இந்த அடிபம்பு பயன்படுத்தப் பட்டிருந்த நிலையில் இப்போது பராமரிப்பின்மை காரணமாக சுமார் இரண்டு வருடங்கள் வரை சீரமைப்பு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதை மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்தவும் சுர்ஜித் நிலைமை இன்னோரு குழந்தைகளுக்கு வேண்டாம்!
இப்படிக்கு
20வது வார்டு பொது மக்கள் பெரிய சாமி தெரு மேலூர் செங்கோட்டை – என்று வாட்ஸ் அப்களில் ஒரு பதிவும் படமும் வைரலானது.
இந்நிலையில் சம்பந்தப் பட்ட விவகாரத்தை உடனே சரி செய்யும் முயற்சியில் செங்கோட்டை நகராட்சியினர் மேற்கொண்டனர்.
செய்தியாளர்கள் வாட்ஸ் அப் குழுவில் பகிரப் பட்ட இந்த செய்தியையும் படத்தையும் கண்டு, உடனடியாக செங்கோட்டை வட்டாட்சியர் ஓசானா பெர்னாண்டோ ஆலோசனை மேற்கொள்ள, நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து, அந்த போர்வெல் சாக்கு வைத்து மூடி சிமிண்ட் கான்கீரிட் சிலாப் மேல வைக்கப்பட்டது. பின்னர் இன்று காலையில் அடிபம்பு ஸ்டாண்ட் மாட்டப்பட்டு மீண்டும் செயல்படவுள்ளது.



