ஜல்லிக்கட்டு: தெரிந்த உணர்வுகள், தெரியாத எதிரிகள்!

நம் தமிழ்ப் பண்பாட்டையும், அதன் அடித்தளமான மாடுகளையும் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை

ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தமிழ்ச் சொந்தங்கள் வீதிக்கு வந்து போராடுவது, பாரதியின் கனவு நனவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று காட்டுகிறது.

ஒளி படைத்தகண்ணினாய்வா! வா! வா!
உறுதி கொண்டநெஞ்சினாய் வா! வா! வா!
என்ற வரிகள் காதில் எதிரொலிக்கும் போது,

தெளிவு பெற்ற மதியினாய் வா! வா! வா! என்ற வரி, நம்மை ஒரு கணம் சிந்திக்க வைக்கிறது.

பாரதியின் இளைஞனுக்கு தெளிந்த மதியில்லாவிட்டால், சித்தர் சொன்னதுபோல் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை, கூத்தாடிகூத்தாடி போட்டு உடைத்துவிடுவானே என்ற கவலையும் எழுகிறது. இந்தக் கவலை சில வரலாற்று உண்மைகளை பதிவிட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜல்லிக்கட்டுத் தடை – மூலமும் பின்னணியும்

மார்ச் 29,2006 : ஒரு தமிழச்சி தமிழுக்கு துரோகம் செய்த நாள். இராமநாதபுரம் மாவட்டம் தனியன்கூட்டம் என்ற கிராமத்தில் மாட்டுவண்டிப் போட்டி (ரேக்ளா) நடத்த கரிசல்குளம் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் திரு.முனியசாமி தேவர் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரனைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி பானுமதி, உணவு இடைவேளைக்குப்பின் வழக்கிற்குத் தொடர்பே இல்லாத ஜல்லிக்கட்டையும், காளைச் சண்டையையும் மாட்டு வண்டிப் போட்டியுடன் சேர்த்து தடை விதித்தார் .

Honble R Banumathi

காளை வண்டிப் போட்டிக்கு அனுமதி கொடுத்த முந்தைய நீதிமன்ற ஆணைகளையெல்லாம் நிராகரித்த நீதிபதி பானுமதி அவர்கள், மாட்டுவண்டிப் போட்டியைத் தடை செய்த அப்போதைய அ.தி.மு.க அரசின் காவல்துறைத் தலைவர் (DGP) சுற்றறிக்கையை மேற்கோள் காட்டினார். இந்தச் சுற்றறிக்கையில் கோவா மாநிலம் ’த்ரியோ’ என்ற இடத்தில் நடக்கும் பாரம்பரியமான காளைச் சண்டைப் போட்டி மும்பை உயர் நீதிமன்றத்தால் 1996 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட தகவலை விலங்குகள் நலவாரியம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கிராமப்புற விளையாட்டுக்கள், பண்பாடு பாரம்பரியம் சமய நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்ற வழக்கறிஞர் சஜி செல்வனின் வாதத்தை அனுமதிக்காமல் இருந்ததுடன், வழக்குச் சம்பந்தமானவர்களுக்கு நோட்டீஸ் கூடக் கொடுக்காமல் ஒரு தலைப்பட்சமாக ஜல்லிக்கட்டிற்கும் தடை விதித்தார் நீதிபதி பானுமதி. பீட்டா, விலங்குகள் நலவாரியம் போன்ற நிறுவனங்களை இழுத்துவிட்டு பண்பாட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு அடித்தளம் அமைத்தது நீதிபதி பானுமதியின் தீர்ப்பு !

http://www.thehindu.com/news/cities/Madurai/Lawyer-reminisces-the-day-jallikattu-was-banned-first/article17039812.ece

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா, விலங்குகள் நலவாரியம் போன்ற அமைப்புக்களை நீதிபதி பானுமதி ஈடுபடுத்தியது ஏன் ? இந்த அமைப்புகள் தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

தமிழகத்தின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் கோயில்களில் உள்ள யானைகளை கோயில்களிலிருந்து அப்புறப்படுத்த இந்த விலங்கு நல அமைப்புக்கள் நீதிமன்றத்தில் வழக்காடி வருகின்றன. கோயில்களிலிருந்து யானைகளைப் பறித்து கடலூர் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள குறும்பரம் கிராமத்தில் Tree Foundation என்ற அமைப்பின் ஆமைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்துள்ளது. ஆமை புகுந்த வீட்டில் யானைகள்! – என்னவாகுமோ !

elephant1
மாட்டையும் யானையையும் கடித்தவர்கள் கடிக்கும் நாட்டு நாய்களை விட்டு வைப்பார்களா?

15 டிசம்பர் 2016 சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து, 36 ஆண்டு காலமாக சென்னையில் செயல்பட்டு வரும் நாட்டு நாய்களான இராஜபாளையம், கோம்பை மற்றும் சிப்பிப்பாறையை இனப்பெருக்கம் செய்யும் மையத்தை மூட உத்தரவு பெற்றுள்ளனர்.
http://www.thehindu.com/news/national/tamil-nadu/HC-orders-closure-of-govt.-dog-breeding-centre/article16832548.ece

விலங்குகள் பராமரிப்பிலுள்ள குறைபாடுகளைக் களைய பரிந்துரை செய்வதாக வழக்குகளில் ஆஜராகி, பின்னர் அவைகளை மூடுவது மட்டுமே தீர்வு என்று அறிக்கை சமர்பித்து வழக்குகளை திசை திருப்புவதே இவர்களின் யுக்தி!

இந்த அமைப்புக்கள் தமிழகம் தவிர மஹாராஷ்டிரம், பஞ்சாப், கர்நாடகம்,கேரளம், குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பாரம்பரியமான விழாக்களை நீதிமன்றம் வாயிலாக முடக்கியுள்ளது.

உலகப் பண்பாட்டின் தொட்டியலாகக் கருதப்படும் நம் நாட்டின் பண்பாடை காட்டுமிராண்டித்தனம் என்று சித்தரித்து, நம் சிந்தனை ஓட்டத்தை மேற்கத்திய அன்னிய வழியில் எடுத்துச் செல்லும் வேலையை இந்த விலங்கு நல அமைப்புகள் செய்து வருகின்றன.

இந்த உள்நோக்கம் கொண்ட அமைப்புக்களை தமிழகத்தில் நுழைய விட்ட தமிழ் பேசும் கிறிஸ்தவ நீதிபதி பானுமதி அவர்கள் யார் கண்ணிலும் படவில்லையே! ஏன் ?

உணர்ச்சி மிகுதியால் உண்மையான காரணத்தைக் கண்டறியும் தன்மையை இழந்தால், நமது போராட்டம் விழலுக்கு இறைத்த நீராகிவிடாதா?

2006 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டையும், காளை வண்டிப் போட்டியையும் தடை செய்து நீதிபதி பானுமதி தீர்ப்பு வழங்கியவுடன் தனித் தமிழ் பேசும் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஜல்லிக்கட்டைப் பிரச்சனைக்கு உள்ளாக்கிய தீர்ப்பை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் ?

சிலரைப் பல காலம் ஏமாற்றலாம்!
பலரை சில காலம் ஏமாற்றலாம் !
எல்லாரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது! என்பதை நிரூபித்து விட்டது மாணவர் சக்தி.

அன்னியர்களும், துரோகிகளும் பண்பாட்டை அழிக்கப் போட்ட திட்டம் இன்று மாணவர் எழுச்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பல காலத் திட்டம் பாழாய் போவதை சகித்துக் கொள்ள முடியுமா விஷமிகளுக்கு !

பண்பாட்டைக் காக்க உருவான மாணவர்த் திரட்சியை இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எதிராக திசை திருப்ப ஜல்லிக்கட்டு துரோகிகள் முயற்சிக்கின்றனர்.

ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகப் போராட்டம் நடக்கும் இடங்களில் இந்த தீய சக்திகள் ஊடுறுவி, இந்தியாவே வெளியேறு, தமிழ்நாடு தனி நாடு, தனி ஈழம் வேண்டும், பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சிகளை இழிவாகச் சித்தரிக்கும் பதாகைகளை ஏந்தியும், வசைச் சொற்பொழிவாற்றியும் மாணவர்களை நாட்டிற்கு எதிராகத் தூண்டி வருகின்றனர்.

elam1

மாட்டுப் பொங்கலையும், ஜல்லிக்கட்டையும் காட்டுமிராண்டித்தனம் என்று பழித்த முஸ்லிம் அமைப்புக்கள், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஆதரிக்கும் போர்வையில் மாணவர் கூட்டத்திற்குள் புகுந்துள்ளனர்.

towheed jamad
மாட்டிறைச்சி தின்னும் போராட்டமும் பசுவதையைத் தடுக்கக் கூடாது என்று போராடியவர்களும் மாணவர்கள் திரட்சியைப் பார்த்தவுடன் மாட்டினப் பாதுகாவலர்களாக நாடகமாடத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஊடுறுவல்காரர்கள், சில மீடியா உதவியுடன் இந்தப் போராட்டம் ஈழத்தமிழர் பிரச்சனை, காவிரப் பிரச்சினை, வறட்சி போன்ற அனைத்திற்குமானது என்று திசை திருப்பப் பார்கிறார்கள். இதன் வாயிலாக மாணவர்கள் மத்தியில் தமிழ்நாடு புறக்கணிக்கப் படுவதாகவும், இந்திய அரசு தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எதிரானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

பண்பாட்டிற்கான மாணவர்களின் திரட்சி, பண்பாட்டை ஒழிக்கும் துரோகிகள் கையில் சிக்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் பாரதியின் வரிகளான

தெளிவு பெற்ற மதியினாய் வா! வா! வா!

என்பதைப் புரிந்து கொண்டு, இந்த நியாயமான போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு உண்மைச் செய்திகளைக் கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும்.

ஜல்லிக்கட்டு வழக்கு நடந்து வந்த பாதை
29 மார்ச் 2006 :      தமிழ் பேசும் கிறிஸ்தவ நீதிபதி பானுமதியால் ஜல்லிக்கட்டு தடை விதிக்கப்பட்டது. மாட்டு வண்டிப் போட்டியைத் தடை செய்ய அ.தி.மு.க ஆட்சியில் வெளியிட்ட சுற்றறிக்கையும் காரணமானது.

21 ஜுலை 2009 :     ஜல்லிக்கட்டு நடத்த ஒழுங்குமுறை சட்டம் பிறப்பித்தது தி.மு.க தலைமையிலான தமிழக அரசு.

27 நவம்பர் 2010 : தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டத்திற்குட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி.

11 ஜூலை 2011 : காளை மாட்டை காட்சி விலங்குப்பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டுத் தடைக்குச் சட்ட முகாந்திரம் அமைத்துக் கொடுத்தது தி.மு.க – கங்கிரஸ் மத்திய அரசு. இந்த அரசை ஆதரித்தவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

11th july 2011
7 மே 2014 : தி.மு.க – காங்கிரஸ் அரசின் முந்தைய ஆணையின் அடிப்படையில் ஜல்லிக்கட்டிற்குத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.

7 ஜனவரி 2016 : ஜல்லிக்கட்டு நடத்த தி.மு.க-காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட்டத்தைத் திருத்தம் செய்து ஆணை வெளியிட்டது மோடியின் மத்திய அரசு.
Jallikattu 2

12 ஜனவரி 2016 : ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்த மோடியின் மத்திய அரசின் ஆணையை உச்ச நீதிமன்றம் தடை செய்தது.

26 ஜூலை 2016 : ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தரத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இந்தத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று மோடியின் மத்திய அரசு வாதிட்டது.

7 டிசம்பர் 2016 : ஜல்லிக்கட்டு வேண்டும் என்று கோரி, பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கில் கட்சி சேர்ந்தார். திரு.சுப்பிரமணிய சாமியின் வாதத்தை எழுத்து மூலம் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
sswamy

14 டிசம்பர் 2016 : திரு.சுப்பிரமணிய சாமி அவர்கள் ஜல்லிக்கட்டு ஏன் வேண்டும் என்ற தனது வாதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

13 ஜனவரி 2017 : பொங்கலுக்கு முன் தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இதுவரை நடந்த நீதிமன்றப் போராட்டத்தில் பா.ஜ.க மற்றும் மோடி அரசைத் தவிர எந்த அமைப்பும், அரசியல் கட்சியும் நேர்மையாக ஈடுபடவில்லை.
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாளர்கள் யார் ?, எதிரிகள் யார்?, துரோகிகள் யார் ? என்பதை இந்த வழக்கு நடந்து வந்த பாதையிலிருந்து அடையாளம் காணலாம்.
ஜல்லிக்கட்டுப் பிரச்சினை, பின்னணியிலுள்ள சூழ்ச்சி, கடந்து வந்த பாதையுடன் சேர்ந்து ஜல்லிக்கட்டைப் பற்றிய வரலாற்றுப் பின்னணியும், தேவையும் அறிந்திருந்தால் நம் பங்கிற்கு என்ன செய்யலாம் என்பது நமக்குத் தெளிவாகும்.

சிந்து சமவெளி நாகரிகத்தில் ஏறு தழுவுதல்(image Indus valley seal)

Indus valley seal
உலகின் தொன்மையான நகர்புற நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம்.. இந்த நாகரிகம் இன்றைய பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள், நம் இந்திய நாட்டின் பஞ்சாப்,ஹரியானா, உத்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை பரந்து விரிந்து கிடந்தது. இந்த நாகரிகம் தழைத்த பகுதிகளில் ஏறு தழுவல் பழக்கத்தில் இருந்ததாகச் சொல்கிறார் அகழ்வாராய்ச்சியாளர் முனைவர்.ஐராவதம் மகாதேவன் அவர்கள்.

கண்ணனும் ஏறு தழுவுதலும்

lord krishna jallikkattu
கோசலை நாட்டு அரசன் நக்னஜீத்தின் மகள் சத்யாவை 7 காளைகளை அடக்கி மணம் புரிந்தான் கண்ணன் என்கிறது ஸ்ரீமத் பாகவதம். சத்யாவிற்கு நக்னஜீதி என்ற பெயரும் உண்டு. இதையே தமிழில் நப்பிண்ணை என்கிறார் 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வார். கண்ணன் ஏறு தழுவியதை நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் பிரபந்த பாசுரங்களில் பாடியிருக்கிறார்கள். நாள் தோரும் நம் தமிழ்நாட்டுக் கோயில்களில் ஒலிக்கும் பிரபந்தப் பாசுரங்கள் ஏறு தழுவும் மரபை நமக்கு நினைவூட்டி வருகிறது.

சங்க இலக்கியத்தில் ஏறு தழுவுதல்
ஆயர் குலத்து இறைவனான கண்ணனே ஏறு தழுவினால், அவனை வழிபடும் முல்லை நிலத்து தமிழன் ஏறு தழுவாமல் இருப்பானா?

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்
கலித்தொகை : 103 (63-64).

இந்தக் கலித்தொகைப் பாடலுக்கு உரை எழுதிய நச்சினாற்கினியர், ”கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்.” என்கிறார்.

இதைத் தவிர தழுவப்படும் ஏறு பற்றியும், அதன் சீற்றம் பற்றியும், அடக்க முன்வரும் வீரர்கள் பற்றியும் குறிப்புகள் கலித்தொகையின் 103 ஆம் பாடலில் இடம் பெற்றுள்ளது.

கோயில் காளை
பொலிகாளையைப் பராமரிப்பது கடினம். அது செலவினத்தையும் அதிகரிக்கும். இந்தப் பழுவைக் குறைக்க, கிராமக் கோயில்களில் பொதுச் செலவில் பொலி காளைகள் வளர்க்கப்படும். இந்தக் காளைகளை தம் வீட்டு மனிதர்களைப் போலக் கருதுவார்கள். சில செல்வந்தர்களும் சேவை மனப்பான்மையோடு பொலிகாளைகளை வளர்ப்பர். இந்தப் பொலிகாளைகள் மாட்டினப் பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும்.

bull temple

ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கோயில் காளைகளை வேறு ஊர் காளைகளுடன் பரிவர்த்தனை செய்து கொள்வர். தன் வழி வந்தக் கன்றுடன் காளைகள் சேர்வதைத் தடுப்பதுடன் வீரியமான மரபணுவும் இந்தப் பரிவர்த்தனையால் பாதுகாக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டி, இந்தக் காளைகளின் தரத்தை நிர்ணயம் செய்ய உதவுகிறது. இதுவே இனப் பெருக்கத்திற்கான தகுதியை முடிவு செய்கிறது. தமிழனின் வாழ்க்கை மற்றும் வழிபாட்டு முறை, ஒரு மரபணு அறிவியலை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்பதில் பெருமை கொள்வோம். (image vadivasal)
வட இந்தியாவில் உள்ள நாட்டுப் பசுக்கள் பால் வளம் மிக்கவை ஆனால் நம் நாட்டுப் பசுக்கள் பாலைக் குறைவாகச் சுரந்தாலும் அவற்றிலிருந்து வெளிப்படும் பொருட்கள் மிக்க மருத்துவ குணம் வாய்ந்தவை. நம் நாட்டின் மருத்துவ முறைகளும், மருந்துகளும் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் நாட்டுப் பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பசுப் பாதுகாப்பு, காளைகளின் பாதுகாப்பில் உள்ளது. காளைகளின் நல்வாழ்வு பெருக ஜல்லிக்கட்டு வாழ வேண்டும்.

temple jallikkattu

 

நம் தமிழ்ப் பண்பாட்டையும், அதன் அடித்தளமான மாடுகளையும் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். இந்தக் கடமையை நாம் எப்படி நிறைவேற்றலாம் ?

1. பசு இனத்தை அழித்து வரும் அன்னிய சக்திகளையும், பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்க்கும் அமைப்புகளை புறக்கணிக்க வேண்டும்.
2. உயரிய தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.
3. பண்பாட்டின் மையமான கோயில்களை உயிரோட்டமுள்ளவைகளாக மாற்ற வேண்டும்
4. அரசியல் மற்றும் பிற காழ்ப்புகளைப் புறம் தள்ளி, நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், சான்றோர்கள் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும்.
5. அன்னிய நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிப்போம்.
6. இயற்கை விவசாயம் மற்றும் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்கி ஆநிரைச் செல்வங்களைச் சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்தி பண்பாட்டையும் சுற்றுச் சூழலையும் பேணி காப்போம்.
7. இறைச்சிக்காகக் கடத்தப்படும் மாடுகளைத் தடுத்து, ஆநிரைச் செல்வங்களைக் காப்போம்.