குடியுரிமைச் சட்டத்தை விடுங்க… என்பிஆர்., என்ஆர்சி.,யை கவனிங்க..!

Published:

caa nrc npr - 2026

குடியுரிமை திருத்தச்சட்டத்தை விட தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) இவை தான் கள்ளக்குடியேறிகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு சரிபார்க்கப்பட்டு போலி ஆதார் போலி ரேஷன் இவை பிடிபட்டால் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆட்களுக்கு வளைகுடா உள்ளிட்ட உலக நாடுகளில் ஆப்பு காத்திருக்கிறது.

இன்று வரை என்னதான் படித்திருந்தாலும் (இங்கிலாந்து, அமெரிக்க படிப்புகள் தவிர) பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆட்களுக்கு வெளிநாடுகளில் அலுவலகங்களில் பெரிய பொறுப்பான வேலைகளோ, பிரமோஷனோ லேசில் தருவதில்லை.

எடுபிடி போல வைத்துக் கொள்கிறார்கள். கணக்கு வழக்கு, நிர்வாகம் போன்றவற்றில் இந்தியர்களுக்கு கிடைக்கும் முன்னுரிமை பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆட்களுக்கு இல்லை.

விஞ்ஞானம் படித்திருந்தாலும் அப்துல் காதர் கான் மாதிரி களவாணியாக இருக்க மாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று உலக நாடுகள் யோசிக்கின்றன. ஆகவே இவர்களில் பலர் போலி இந்திய பாஸ்போர்ட்களில் வேலைக்குப் போய்வந்தனர்.

இப்போது உலக நாடுகள் சோதனைகளைக் கடுமையாக்கி விட்டன. போலி பாஸ்போர்ட்களில் சிக்கினால் கண், கைரேகை என்று பதிவு எடுத்துக்கொண்டு வேறு பெயரில் வந்தாலும் புற மண்டையில் அடித்துப் பத்திவிடுகிறார்கள்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இதைச் சமாளிக்க இவர்கள் இந்நியா வந்து ரேஷன் அட்டை, ஆதார், வாக்காளர் அட்டை என்று பெற்றுக் கொண்டு பாஸ்போர்ட் எடுத்தனர். தேர்தல் நேரத்தில் பலர் இங்கே வந்து வாக்களித்தனர். வாக்குவங்கி பெருகியதில் செக்கூலர் கட்சிகளுக்கும் மகிழ்ச்சி.

இவர்களை குஷிப்படுத்த வெளிநாட்டார் சட்டத்தை திருத்துவதாக 2006ல் சோனியா அசாமில் பிரச்சாரம் செய்தார். மற்ற செக்கூலர் கட்சியினர் ஆதரித்தனர். அசாம் மக்கள் எதிர்த்த போதும் கள்ளக்குடியேறிகளுக்கு கொண்டாட்டம்.

ஆனால் தற்போது உச்சநீதிமன்ற மேற்பார்வையில் தேசிய குடிமக்கள் பதிவேடு அசாமில் சரிபார்க்கப்பட்ட போதிருந்தே அவர்கள் வயிற்றில் புளி கரைய ஆரம்பித்தது. இப்போது 2010ல் சரிபார்க்கப்பட்ட தேசிய மக்கள்தொகைப் பதிவேடு இப்போது பத்தாண்டுகளுக்கு ஒரு முறைக்கான சரிபார்த்தல் 2020ல் தொடங்கப்படுகிறது.

கள்ளக்குடியேறிகளுக்கு பிழைப்பு போகுமே என்ற பயம், செக்கூலர்களுக்கும் ஓட்டு வங்கி திவாலாகுமே என்ற பயம். கள்ளத்தனமாக வந்தவர்கள் பிடிபட்டால் அவர்கள் நாட்டுக்குத் திரும்பிப் போவது ஒரு விஷயம்.

அதுவரை பாதுகாப்பு முகாமில் வைக்கப்படுவார்கள். ஓட்டு, ரேஷன், ஆதார், பாஸ்போர்ட் எதுவும் கிடையாது. அகதி என்ற கதி கூட கிடையாது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சொந்த நாடு தவிர வேறு நாட்டுக்குப் போக முடியாது. பிழைப்பு ஃபணால். ஓட்டு போட முடியாவிட்டால் இவர்களால் சட்சிகளுக்குப் பிரயோசனமில்லை.

இதை எல்லாம் கோர்வையாக யோசித்தால் இந்தப் போராட்டங்கள் ஓட்டு வங்கியைத் தக்கவைக்கவும், சொந்த நாட்டுப் பெயர் சொல்லிப் பிழைக்க முடியாமல் போலியாக இந்தியன் என்று பிழைத்த பிழைப்பைத் தொடரவுமே என்பது புரியும்.

பரம்பரை இந்தியர்களுக்கு இதில் பாதிப்பில்லை. பஞ்சத்துக்கு இந்தியன் என்பவர்களுக்கே பாதிப்பு.

எதிர்ப்பு என்று ஒண்ட வந்த பிடாரிகள் ஊர்ப்பிடாரிகளை மிரட்டுகின்றன. எந்த ஊர்ப்பிடாரிக்கும் இதில் பாதிப்பில்லை என்றாலும் ஊர்ப்பிடாரிகள் சில ஒண்ட வந்த பிடாரிகளுக்கு ஒத்து ஊதுகின்றன. இவைகளோடு சேராத ஊர்ப்பிடாரிகள் பதிலடி கொடுத்தால் தாங்க முடியாது.

  • ?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img