கட்டுரைகள் தாவரத்துக்கும் உயிருண்டு... எனில்... அதை உண்டால் அசைவமா?!

தாவரத்துக்கும் உயிருண்டு… எனில்… அதை உண்டால் அசைவமா?!

தாவரத்துக்கும் உயிருண்டு… எனில்… அதை சாப்பிட்டால் அசைவமா?! வாரியார் சொன்ன பதில்!

-

- Advertisment -

சினிமா:

லக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா?

"கனா காதல்', "என் இனிய பொன் நிலாவே', "தோட்டாக்கள் பூவாச்சு', "ஏனோ வானிலை மாறுதே', "இவள் அழகு', "கூடல்', "ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல்' போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இளையராஜாவே கைப்பட எழுதி… இசையமைத்து… பாடிக் கொடுத்த அந்தப் பாடல்… பொக்கிஷம்!

"அரண்மனை கிளி" - நான் உதவி இயக்குநராய் (clap asst) வேலை பார்த்த முதல் படம்...(வருடம் 1992)... அந்தப் படத்தின் பாடல்கள் நீங்கள் அறிந்ததே...

விலைமகள் சுயசரிதையில் ஐஸ்வர்யா ராய்?

பினோதினி கதாபாத்திரத்தில் நடிக்க வித்யாபாலனிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வந்தது.

பாரம்பரிய உடையில் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம்!

மலையாளத்தில் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்மம் எனும் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் நாயகனாக மோகன் லால் நடித்துள்ளார்.
-Advertisement-

பத்திரிகை சுதந்திரம் காக்கப்படும்: கருணா பாதையில் ஸ்டாலினும் இந்திரா பாதையில் ராகுலும் செல்வதனால்!

கருணாநிதியின் பாதையில் ஸ்டாலினும், இந்திரா காந்தியின் பாதையில் ராகுல் காந்தியும் நடந்து நடந்து ஜனநாயகம் காக்க, பத்ரிகை சுதந்திரம் காக்க போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அங்கே பள்ளிக்கட்டு… இங்கே பல்லக்காட்டு! வலைத்தளவாசிகளிடம் வறுபடும் ஓபிஎஸ்.,!

ஐயப்பனை பத்தி அசிங்கமா பெரியார் சொன்னத பாக்கதான் சபரிமலை போனாரா? வறுபடும் ஓபிஎஸ்.,!

நேர்மறையான ஆன்மிக அரசியல்… இனிதே ஆரம்பம்!

'ஆமாம்டா, நான் ஆன்மிகவாதிதான், நான் முன்னெடுப்பது நேர்மையான ஆன்மிக அரசியல்தான், இனிமேல் இங்கே இப்படித்தான்' எனத் 'தாழ்மையோடு' மாநிலம் அதிர முழங்குகிறார் ரஜினி. இனிதே ஆரம்பம் !

1971ல் ஒரு கன்னடர் செய்ததை… 2020ல் ஒரு மராட்டியர் தவறு என்கிறார்! வழக்கம்போல் தமிழர்…கள்!

1971இல் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று வர்ணித்த கன்னடர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் செய்த செயலை, 2020ல் சுமார் 50 ஆண்டுகள் கழித்து ஒரு மராட்டியரான ரஜினி வெளிப்படுத்திச் சொல்ல, வழக்கம் போல் தமிழர் பெயரில் இயங்கும்

கீழக்கரையில் காஷ்மீரைச் சேர்ந்த இருவர்… போலீஸார் விசாரணை!

கீழக்கரையில் தங்கியிருந்த காஷ்மீரைச் சேர்ந்த இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மராட்டிய வீரசிவாஜி … வங்கத்து சிங்கம் நேதாஜி!

ஆயுதப் போராட்டத்தால் பிரிட்டிஷாரை நடுநடுங்க வைத்த மற்றுமொரு வீரசிவாஜி நம் நேதாஜி.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.54, ஆகவும், டீசல் விலை...

குடமுழுக்கு சர்ச்சை: ஆகம மந்திரம் அறிவாரோ? தமிழ் தோத்திரம் அறிவாரோ?! ஏனிந்த வீண் விளம்பரம்?

தற்போது தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு சர்ச்சை பெரிதாக உருவெடுத்துள்ளது. குடமுழுக்கை எந்த மொழியில் நடத்துவது என்பது பற்றிய சர்ச்சை இது. தஞ்சைப் பெரிய கோவில் மட்டுமல்ல, எந்தக் கோவிலின் பூஜைகளும் கும்பாபிஷேகமும் அதற்குரிய ஆகம விதிகளின்படியேதான் நடத்தப்படவேண்டும்.

வில்சன் கொலை வழக்கில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஷேக் தாவூத் என்பவர் தப்பியோடி விட்டார். ஷேக் தாவூத் ஐ.எஸ் அமைப்புக்கு உதவியதாக தேசிய புலனாய்வு முகமை என்ஐஏ., ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளது என்று கூறினர்.

சென்னை ரிச்சி தெருவில் இந்து வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய வியாபாரிகள்!

தொடர்ந்து, அப்பகுதி வியாபாரிகளுடன் சிந்தாதிரிப்பேட்டை F2 காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டது. மேலும், இந்த மிரட்டல் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்து முன்னணியினர் வலியுறுத்தினர்.

‘என் அப்பா’ என்ற தலைப்பில் மாணவன் எழுதிய உருக்கமான கட்டுரை! படித்து… உதவ ஓடிவந்த அமைச்சர்!

ஊனமுற்ற தாய்க்கு பென்ஷன் 600 ரூபாய் வருகிறது. சிறு தோட்டத்தில் தாயும் மகனும் வேலை செய்கின்றனர். தற்போது மகாராஷ்டிரா அமைச்சர் 'தனஞ்சய் முண்டே' இந்த செய்தியை அறிந்ததன் மூலம் சிறுவனுக்கு உதவி கிடைத்துள்ளது.

ஆளில்லா விண்கலத்தில் தனித்து பயணிக்க போகும் பெண் யார் தெரியுமா?

மாதிரிகளின் அளவுகளைக் கண்காணித்தல், ஆபத்துக் காலத்தில் எச்சரிக்கை செய்தல், மேலும் ஸ்விட்ச் பேனல் செயல்பாட்டிலும் என்னால் ஈடுபடமுடியும். விண்வெளிக்கும் வரும் விண்வெளி வீரர்களுடன் உரையாட முடியும், அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கவும் முடியும்"

போராட்டத்தின் காரணமாக மன்னிப்பு கோரிய தக்கலை நூருல் இஸ்லாம் கல்லூரி நிர்வாகி!

இந்துமுன்னணியினர் நடத்திய போராட்டத்தின் காரணமாக நூருல் இசுலாம் கல்லூரி நிர்வாகி மன்னிப்பு கோரினார்.

சமூக நீதியைக் காக்க 2021-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்!

மராட்டியம், ஒதிஷா மாநிலங்களைப் பின்பற்றி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
- Advertisement -
- Advertisement -

தாவரத்துக்கும் உயிருண்டு… எனில்… அதை சாப்பிட்டால் அசைவமா?! வாரியார் சொன்ன பதில்!

புலால் உண்ணாமை ஓர் உயர்ந்த அறமாகச் சொல்லப் படுகிறது. புலால் மறுப்புக்கு அடிப்படையாக அமைவது உயிர் நேயம்.

மன்னன் பிம்பிசாரன் சபைக்குச் சென்று யாகத்தில் பலியிடவிருந்த ஆடுகளைப் பலியிடாமல் காப்பாற்றினார் புத்தர்.

மனிதர்கள் கடவுளின் வாயுள்ள பிள்ளைகள் என்றும் விலங்குகள் கடவுளின் வாயில்லாத பிள்ளைகள் என்றும், வாயில்லாத பிள்ளையை வாயுள்ள பிள்ளை வெட்டிக் கறிசமைத்தால் தந்தையான கடவுள் அதை எப்படி உண்பார் என்றும் புத்தர் வாதாடி பிம்பிசாரனின் மனத்தை மாற்றியதாக கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை `ஆசிய ஜோதி` என்ற கவிதை நூலில் எழுதுகிறார்.

தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுப்பதற்கு மாற்றாக பூசணிக்காயை வெட்டிப் பலியிடலாம் என்ற வழக்கம் பின்னர் தோற்றுவிக்கப்பட்டது. அமாவாசையன்று பூசணிக்காயை வெட்டி திருஷ்டி கழிப்பதெல்லாம் உயிர்ப் பலிக்கு மாற்றாக வந்த ஏற்பாடுதான்.

`நான்கு கால் உயிர்களையும் இரண்டு கால் உயிர்களையும் தவிர்த்துவிட்டு ஒருகால் உயிரை மட்டும் உண்ணுங்களேன்` என்கிறது ஒரு வெளிதேசப் பழமொழி.

நான்கு கால் உயிர் என்பது விலங்கினம். இரண்டு கால் உயிர் என்பது பறவையினம். ஒருகால் உயிர் எது தெரியுமா? தாவரம் தான்! உலகில் மரம் செடி கொடி முதலிய எல்லாத் தாவரங்களும் ஒற்றைக் காலில்தான் நிற்கின்றன என்ற உண்மையைக் கண்டுணர்ந்து எழுந்த பழமொழி இது.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னவர் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ். விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதை, ஜகதீஷ் சந்திரபோஸின் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தார். அவரது நூல் வெளிவரவும் சகோதரி நிவேதிதைதான் உதவி புரிந்தார். நிவேதிதை மேல் ஜகதீஷ் சந்திர போஸுக்கு அளவற்ற மரியாதை இருந்தது.

நிவேதிதை காலமான பின்னர் ஜகதீஷ் சந்திரபோஸ் கொல்கத்தாவில் `போஸ் நிறுவனம்` என்ற ஆய்வுக் கூடத்தை நிறுவி, அதில் நிவேதிதையின் அஸ்தியை பக்தியுடன் கொண்டுவைத்தார். கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து கையில் விளக்கை ஏந்தியவாறிருக்கும் நிவேதிதையின் புடைப்புச் சிற்பம் ஒன்றையும் அங்கு அமைத்தார்.

ஆண்டுகள் பல கடந்த பின்னர் ஒருநாள் மாலை. தமிழகத்தில் வாரியார் சுவாமிகள் வள்ளலார் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். புலால் உண்ணாமையை வள்ளலார் முக்கியமான அறமாக வலியுறுத்துகிறார் எனத் தம் சொற்பொழிவின் இடையே குறிப்பிட்டார் வாரியார்.

அப்போது, `தாவரங்களுக்கும் உயிர் உண்டு!` என்பது கண்டுபிடிக்கப் பட்டுவிட்டதால், தாவரங்களையும் சாப்பிடக் கூடாதுதானே?` என்று வாரியாரிடம் விதண்டாவாதமாகக் கேள்வி எழுப்பினார் ஓர் இளைஞர். அதற்கு நகைத்தவாறே பதில் சொன்னார் வாரியார்:

அவரைக்காயைப் பறித்தாலோ கீரையைக் கிள்ளினாலோ அந்தச் செடி மறுபடி வளர்கிறது, அதுபோல் ஆட்டின் கழுத்தை வெட்டினாலும் கோழியின் கழுத்தைத் திருகினாலும் அவை மறுபடி முளைத்தால் நீ அசைவம் சாப்பிடலாம்!

  • திருப்பூர் கிருஷ்ணன்
- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,911FansLike
199FollowersFollow
748FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை

உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்

ஆரோக்கிய உணவு: சுரைக்காய் சப்ஜி!

5-6 நிமிடம் ஆன பின்னர், வாணலியைத் திறந்து ஒருமுறை கிளறி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாறினால், சுரைக்காய் சப்ஜி ரெடி!!
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |