தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை – இனி நீங்கள் இது குறித்த அனைத்து கற்பனைக் கட்டுக்கதைகளையும் அகற்றலாம்!
நாட்டில் உள்ள அனைத்து ‘வழக்கமான குடியிருப்பாளர்களின்’ தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பிஆர்) 2010 இல் உருவாக்கப்பட்டது! இதில் ஒரு பகுதியாக இருப்பது இந்தியராகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பு. நமது குடியுரிமை அல்லது குடியுரிமை நிலையை NPR என்பது தீர்மானிக்காது என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்!
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) இந்திய குடியரசுத் தலைவரால் கையெழுதிடப்பட்டு, நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், அதைப் பற்றி பல கட்டுக்கதைகள் பரப்பப்பட்டு வருகின்றன!
தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்). CAA குறித்த உண்மைத் தகவல்கள் ஏற்கெனவே அறியப்பட்டுள்ள நிலையில், மற்றும் பரவியுள்ள நிலையில், இந்திய எதிர்ப்பு சக்திகள் அதை NPR மற்றும் குடிமக்கள் தேசிய பதிவு (NRC) ஆகியவற்றுடன் இணைத்து நாட்டின் ஒரு பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன.
நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஏற்கெனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்.பி.ஆர் புதுப்பிப்பதற்கான நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
NPR பயிற்சி ஏப்ரல் 2021 முதல் தொடங்கும். இந்த பயிற்சிக்கு அரசு, ரூ. 3,900 கோடியை ஒதுக்கியுள்ளது. மக்கள்தொகை பதிவாக மட்டுமே இருக்கும் NPR குறித்த சில உண்மைத் தகவல்களை இங்கே பார்ப்போம்…
NPR என்றால் என்ன?
நாட்டிலுள்ள அனைத்து ‘வழக்கமான குடியிருப்பாளர்களின்’ தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பிஆர்) 2010 இல் உருவாக்கப்பட்டது.
வீட்டுவசதி மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2010 உடன் என்.பி.ஆர் தகவல் சேகரிப்புக்கான களப்பணி மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் 119 கோடிக்கும் அதிகமான குடியிருப்பாளர்களின் மின்னணு தரவுத்தளம் (ரெஸிடெண்ட்ஸ் எலக்ட்ரானிக் டேடாபேஸ்) வழக்கமான அனைத்து குடியிருப்பாளர்களின் குறிப்பிட்ட தகவல்களை சேகரிப்பதன் மூலம் ஆங்கிலத்திலும் பிராந்திய மொழிகளிலும் NPR இன் கீழ் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு எடுத்துள்ள முடிவுப்படி, ஒரு விரிவான தரவுத்தளத்தை உருவாக்க (டேடாபேஸ்) அனைத்து மாநிலங்கள் / யூனியன் டெரிடரிக்களில் (அசாம் மற்றும் மேகாலயாவைத் தவிர) 2015-16 ஆம் ஆண்டில் என்.பி.ஆர் தரவுத்தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டை உருவாக்குவதற்கான திட்டம் குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் குடியுரிமை விதிகள், 2003 ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
நாட்டின் அனைத்து ‘வழக்கமான குடியிருப்பாளர்களின்’ விவரங்களையும், அவர்கள் குடிமக்களாக இருந்தாலும் சரி, இந்தியாவின் குடிமக்கள் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் தகவல்களைப் பெறுகிறது NPR.
குடியுரிமை விதிகள், 2003 மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் அல்லது அவற்றின் நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் வீட்டுத் தலைவர்கள் ஆகியோரின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை வரையறுக்கிறது.
குடியுரிமை (சிடிசன்ஷிப்) அல்லது குடியிருப்பாளர் (ரெஸிடெண்ட்) என்ற நிலையை NPR ஒருபோதும் தீர்மானிக்காது.
NPR ஐ புதுப்பிப்பது என்றால் என்ன?
குடிமக்களின் வீட்டுவசதி, சொந்த வீடுகள் பட்டியலுடன் குடிமக்கள் பதிவேட்டு தகவல்களை பூர்த்தி செய்து வைத்துக் கொள்ள அரசு திட்டம் இட்டு வருகிறது. அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்ட தகவல்களுக்கு இந்த அடிப்படைத் தகவகள் அரசுக்கு தேவைப்படுகின்றன.