கேரள சமையல்: பலாப்பழ பஜ்ஜி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
jack frut - 2026

பலாப்பழ இனிப்பு பஜ்ஜி

தேவையான பொருட்கள்

பெரிய பலாப்பழச் சுளைகள் -8,
மைதா மாவு (அ) பதப்படுத்திய கோதுமை மாவு -1 பெரிய கப், சர்க்கரை -6 டீஸ்பூன்,
கலர் பவுடர் -சிறிது,
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்,
உப்பு – தே. அளவு
சமையல் சோடா -ஒரு சிட்டிகை,
பொரிக்க தேங்காய் எண்ணெய் -தேவைக்கு,
நெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

jack fruit bajji 1 - 2026

கோதுமை அல்லது மைதாவில் உப்பு, சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு நெய்யை சூடு செய்து ஊற்றவும்.

தேவையான தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பலாப்பழத்தை சிறிது கனமாக, நீளவாக்கில் வெட்டி, கரைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுத்து எண்ணெயை வடித்து, சுவையான பலாப்பழ பஜ்ஜியைப் பரிமாறவும்.

காரம் :

காரமாக செய்ய வேண்டுமானால் சர்க்கரை சேர்க்காமல், மிளகுத்தூள்,உப்பு, சீரகத்தூள், செய்யவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.