December 6, 2025, 5:56 AM
24.9 C
Chennai

ஆண்டாள் சர்ச்சை: மக்கள் மனதை புண்படுத்தும் கருத்துகள் கூடாது!

தினமணி நாளிதழில் ‘தமிழின் ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரையில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை இழிவுபடுத்தும் வகையில் தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. எழுதியக் கட்டுரையின் தலைப்புக்கு சற்றும் தொடர்பில்லாத வகையில் ஆண்டாள் குறித்த கற்பனை மற்றும் யூகங்களை கவிஞர் திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
‘தமிழின் ஆண்டாள்’ கட்டுரையில் ஆண்டாளின் சிறப்புகளைப் பற்றி அடுக்கிக் கொண்டு வரும் கவிஞர் வைரமுத்து இடையிடையே சில வினாக்களைத் தொடுத்து, அதற்கு பதிலளிப்பதாகக்  கூறி ஆண்டாளை குலமறியா பெண்ணாக சித்தரிக்க முயன்றிருக்கிறார். அதன் அடுத்தக்கட்டமாக அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட Indian Movement: some aspects of dissent, protest and reform  என்ற நூலில் ஆண்டாள் குறித்து,‘‘Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple’’ என்று குறிப்பிடப் பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி ஆண்டாளை வணங்குபவர்களையும், அவரது பாடல்களை நேசிப்பவர்களையும்  காயப்படுத்தியிருக்கிறார். இது சர்ச்சையான பிறகு தமக்கு எதிரான கொந்தளிப்பைக் குறைக்கும் வகையில்  தமது வரிகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் இந்த விளக்கம் காயப்பட்ட மனங்களுக்கு எந்த வகையிலும் மருந்தாக அமையாது.
Andal Rengamannar - 2025
இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் ஆண்டாள் குறித்து இடம்பெற்றுள்ள  கருத்துகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆண்டாளைப் பற்றி அறியப்படாத நாட்டில் ஆய்வு என்ற பெயரில் அவரைப் பற்றி எவர் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதி பட்டம் பெற்று செல்லலாம். ஆனால், ஆண்டாள் வாழ்ந்த மண்ணில், அவரை வணங்குபவர்கள் வாழும் மண்ணில் அவர் குறித்த அடிப்படையற்ற சர்ச்சைக் கருத்தை பயன்படுத்துவதற்கு முன் வைரமுத்து பத்தாயிரம் முறையாவது யோசித்திருக்க வேண்டும். இந்தக் கருத்தை பக்தர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்  என்று வைரமுத்து குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும் போது, இப்படி ஒரு சர்ச்சையை ஏற்படும் என்பதை அறிந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.
ஆண்டாள் குலமறியாத பெண் என்பதையும் ஏற்க முடியாது. ஆண்டாளின் பாசுரங்களில் மிகத் தெளிவாக “பட்டர்பிரான் கோதை”, “வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை” என்று பலவாறாக கோதையின் சுய அடையாளம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. எங்கோ இண்டியானா  பல்கலைக்கழக நூலில் இடம்பெற்றுள்ள கருத்தை மேற்கோள் காட்டிய கவிஞருக்கு ஆண்டாள் பாசுரத்தில் இடம் பெற்றுள்ள அவரது அடையாளங்கள் தெரியாமல் போனது மிகவும் துரதிருஷ்டவசமானது தான்.
காலத்தால் அழிக்க முடியாத இலக்கியம் படைத்த ஆண்டாள் தமிழர்களின் அடையாளம் ஆவார். இது ஒருபுறமிருக்க சமூக பொறுப்புள்ளவர்கள் மக்களின் உணர்வோடு விளையாடும் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். கருத்துரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப் பட்டுள்ளது என்றாலும் கூட, அது மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.

தமிழகம் நல்லிணக்கத்தின் பூமி. அது காப்பாற்றப்பட வேண்டும். எனவே, எந்தவொரு மதம், எந்தவொரு சமுதாயம், எந்தவொரு நம்பிக்கை குறித்தும் வெறுப்பு  கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்து, தமிழகத்தில் அமைதி, ஒருமைப்பாடு, நல்லிணக்கம் ஆகியவை தழைத்தோங்க பங்களிக்க வேண்டும்.
– மருத்துவர் ராமதாஸ் 
நிறுவுனர், பாமக.,

2 COMMENTS

  1. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பேச்சுக்கு நன்றி. பிஜேபி தலைவர் தமிழிசை சொன்னது போல இவரது மன்னிப்பு கண்துடைப்பு. கேலியான வருத்தம்,. வைரமுத்து பேசிய அநாகரிகமான பேச்சுக்கு வன்மையாக கண்டனம் தெரிவித்தால் மட்டும் போதாது. வைரமுத்துவை தமிழ் கூறும் நல்லுலகம் புறக்கணிக்க வேண்டும், புனித மார்கழி மாதத்தில் ஆண்டாள் திருப்பாவை பாடி வரும் நேரத்தில் இவர் கொச்சையாக பேசியிருப்பது இவரது புத்தியின் தரத்தை காட்டுகிறது. சினிமாகாரர்கள் இவரை கூப்பிடுவதை நிறுத்தவேண்டும். ஆண்டாளின் தமிழ் எங்கே, இந்த வைரமுத்துவின் பிதற்றல் வரிகள் எங்கே.

  2. டாக்டர் ராமதாஸ் அய்யா, தமிழையே கொலைசெய்தவரை இதை விட பொருத்தமாக கண்டிக்க முடியாது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories