spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்அண்ணா என் உடைமைப் பொருள் (16): எழுதிக் காட்டிய (mis)guide..!

அண்ணா என் உடைமைப் பொருள் (16): எழுதிக் காட்டிய (mis)guide..!

- Advertisement -
anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 16
– வேதா டி. ஸ்ரீதரன் –

Sridhar Need not Come to this Beggar for Guidance
He can Always Take Guidance from Ra ganapati

புட்டபர்த்தி தரிசனம் முடிந்து திரும்பிய சில நாட்களில் அண்ணாவைப் பார்க்கச் சென்றிருந்தேன். அன்று அண்ணா மௌனம். அவர் மௌனத்தின் போது நாம் பேசலாம். ஆனால், அவர் எழுதித்தான் காட்டுவார். பதிப்பக வேலைகள் தொடர்பாக விரைவில் நான் வெளியூர் செல்ல இருப்பதைத் தெரிவித்தேன். உடனே அண்ணா, பதிப்பகம் ஆரம்பிப்பது குறித்து யோகியாரிடம் அனுமதி வேண்டுமாறு எழுதிக் காட்டினார். அவரிடம் வெறுமனே ஆசி கேட்க வேண்டாம் என்றும், பதிப்பகம் ஆரம்பிப்பதற்கு அனுமதி தருமாறு கேட்கவும் என்றும் தெரிவித்தார். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே ஒரு மகானின் அனுமதி கிடைத்து விட்டால் உனது எண்ணம் உறுதியான செயல் திட்டமாகி விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

(அண்ணா எழுதிக் காட்டிய விஷயம் பசுமையாக நினைவில் உள்ளது என்றாலும் வார்த்தைகள் மறந்து விட்டன. எனினும், ‘‘அவர் ஆசி தருவது போல நடித்து உன்னை ஏமாற்றி விளையாடிப் பார்க்கவும் கூடும்’’ என்ற வரியும் ‘‘Then your idea becomes a pucca plan’’ என்ற வரியும் நன்றாக நினைவில் உள்ளன.)

அண்ணா கொடுத்த அறிமுகக் கடிதத்தை எடுத்துக் கொண்டு மறு நாளே திருவண்ணாமலை சென்றேன். யோகியாருக்கு மிக அருகில் என்னை அமர வைத்தார்கள். யோகியார் என் கையைப் பிடித்துக் கொண்டார். பின்னர் என் முதுகில் தட்டியவாறே, ‘‘You need not come to this beggar for guidance. Regarding your textbook printing, you can take guidance from Ra. Ganapati. My Father says Ra. Ganapati will always guide Sridhar. Ra. Ganapatiji is competent of guiding Sridhar. He can always take guidance from Ra. Ganapati. My Father says Sridhar need not come to this beggar for guidance. My Father blesses you, my son. My Father blesses you, my son. My Father blesses you, my son’’ என்று கூறினார்.

பேசும் சக்தியை நான் முழுமையாகவே இழந்திருந்தேன். மறு நாள் அண்ணாவைச் சந்தித்தேன். அன்றும் அண்ணா மௌன விரதம்.

யோகியார் சந்திப்பு விவரங்களைக் கேட்டதும் அண்ணா, ‘‘Take it up, bravo! Swami will (mis)guide you through anna!’’ என்று எழுதிக் காட்டினார்.

அண்ணா எழுதிக் காட்டிய (mis)guide என்ற வார்த்தை வேடிக்கையாக இருந்தாலும் எனக்குள் ஓர் உறுத்தலாகவும் இருந்தது.

எங்கள் பதிப்பக வியாபாரம் கடைசி வரை (mis)guidance வழியிலேயே போனது. அண்ணாவை நான் அடிவயிற்றில் இருந்து சபித்திருக்கிறேன் என்று இந்தத் தொடரின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தேன். அதற்கு இந்த (mis)guidance உம் ஒரு முக்கிய காரணம்.

அனேகமாக, அண்ணா எனக்குச் செய்த மிகப் பெரிய அனுக்கிரகம் இந்த (mis)guidance தான் என்பது எனக்குப் புரிந்த போது அண்ணா காலம் முடிவடைந்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe