spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்பாரதி-100: கண்ணன் பாட்டு (6)

பாரதி-100: கண்ணன் பாட்டு (6)

- Advertisement -
subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பகுதி – 6, கண்ணன் – என் தாய்

   கண்ணன் பாட்டின் இரண்டாம் பாடலான கண்ணன் என் தாய் நொண்டிச் சிந்து வகையைச் சேர்நத்து. முதலில் பாடலைப் பார்க்கலாம்.

உண்ண உண்ணத் தெவிட்டாதே – அம்மை

உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்;

வண்ணமுற வைத்தெனக் கே – என்றன்

வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,

கண்ணனெனும் பெயருடையாள், – என்னை

கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து

மண்ணெனுந்தன் மடியில்வைத்தே – பல

மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். … 1

இன்பமெனச் சிலகதைகள் – எனக்

கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்

துன்பமெனச் சில கதைகள் – கெட்ட

தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்

என்பருவம் என்றன் விருப்பம் – எனும்

இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே

அன்பொடவள் சொல்லிவரு வாள்; – அதில்

அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன். … 2

விந்தைவிந்தை யாக எனக்கே – பல

விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;

சந்திரனென் றொரு பொம்மை – அதில்

தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்;

மந்தை மந்தையா மேகம் – பல

வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்;

முந்தஒரு சூரியனுண்டு – அதன்

முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. … 3

வானத்து மீன்க ளுண்டு – சிறு

மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;

நானத்தைக் கணக்கிடவே – மனம்

நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;

கானத்து மலைக ளுண்டு – எந்தக்

காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை;

மோனத்தி லேயிருக்கும் – ஒரு

மொழியுலை யாதுவிளை யாடவருங் காண். … 4

நல்லநல்ல நதிகளுண்டு – அவை

நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்;

மெல்ல மெல்லப் போயவை தாம் – விழும்

விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்;

எல்லையதிற் காணுவ தில்லை; – அலை

எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;

ஒல்லெனுமப் பாட்டினிலே – அம்மை

ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண். … 5

சோலைகள் காவினங் கள் – அங்கு

சூழ்தரும் பலநிற மணிமலர் கள்

சாலவும் இனியன வாய் – அங்கு

தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்

ஞாலமுற்றிலும் நிறைந் தே – மிக

நயந்தரு பொம்மைகள் எனக்கென வே;

கோலமுஞ் சுவையு முற – அவள்

கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். … 6

தின்றிடப் பண்டங்களும் – செவி

தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக்க ளும்,

ஒன்றுறப் பழகுதற் கே – அறி

வுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்;

கொன்றிடு மெனஇனி தாய் – இன்பக்

கொடுநெருப் பாய் அனற் சுவையமு தாய்,

நன்றியல் காதலுக் கே – இந்த

நாரியர் தமையெனைச் சூழவைத் தாள். … 7

இறகுடைப் பறவைக ளும் – நிலந்

திரிந்திடும் விலங்குகள் ஊர்வனங்கள்

அறைகடல் நிறைந்திட வே – எண்ணில்

அமைத்திடற் கரியபல் வகைப்பட வே

சுறவுகள் மீன்வகை கள் – எனத்

தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;

நிறைவுற இன்பம்வைத் தாள்; – அதை

நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை. … 8

சாத்திரம் கோடி வைத்தாள்; – அவை

தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்;

மீத்திடும் பொழுதினி லே – நான்

வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே

கோத்தபொய் வேதங்களும் – மதக்

கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்

மூத்தவர் பொய்ந்நடை யும் – இள

மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்; … 9

வேண்டிய கொடுத்திடு வாள்; – அவை

விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;

ஆண்டருள் புரிந்திடு வாள்; – அண்ணன்

அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்;

யாண்டுமெக் காலத்தி னும் – அவள்

இன்னருள் பாடுநற் றெழில்புரி வேன்;

நீண்டதொர் புகழ்வாழ் வும் – பிற

நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள். … 10

இப்பாடலின் பொருளினை அடுத்த பதிவில் காணலாம். எளிய தமிழ், எளிய நடை கொண்ட இப்பாடலுக்கு பொருள் தேவையில்லை. தங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருந்தால் இப்பாடலைப் படித்துக்காண்பியுங்கள். அவர்களுக்கு தம் அன்னையின் நினைவு வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe