
கடந்த இரு நாட்களாக தமிழகத்தில் பரவலாகப் பேசப்படும் விஷயம், திருச்செந்தூருக்கு அருகே உடன்குடியில், மதிமுக., வினருக்கும், பாஜக.,வினருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பும், கல்லெறி அரசியலும்தான்!
இந்தச் சம்பவம் வெகு சாதாரணமானது. பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசிய வைகோ.,வுக்கு எங்கள் ஊருக்கு வரும்போது கருப்புக் கொடி காட்டுவோம் என்று கூறியிருந்தனர் உடன்குடி நகர பாஜக.,வினர். இந்நிலையில், வைகோ வந்தார். அவரிடம் தகவல் சொன்ன போலீஸார் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தினர். அப்போதும், நான் ஒன்றும் மோடி போல் கோழையல்ல, வேறு பாதையில் செல்வதற்கு என்று கூறி, அதே பாதையில் சென்றார் வைகோ.
அங்கே பாஜக.,வினர் எதிர்கோஷம் போட்டனர். எப்போதுமே வாழ்க கேட்டுப் பழகிய வைகோ, முதல்முறையாக தன் முன்னே ஒழிக கோஷத்தைக் காதால் கேட்டார். அதில் ஆத்திரம் தலைக்கு ஏறியது. எதிர்த்து கோஷம் போட்டதற்கே ரத்தக் கொதிப்பு ஏற்பட்டது வைகோ.,வுக்கு! நீங்கள் எல்லாம் நாசகாரக் கூட்டம் என்று கத்தினார். பிறகு, உங்களுக்கு தெம்பு இருந்தா வந்து காட்டுங்கடா… போலீஸ்காரர்களே அவர்கள் காட்டட்டும். அவர்களை விடுங்க.. என் அருகே வரட்டும் என்று கூறி, பாஜக.,வினரை வன்முறை செய்யத் தூண்டிவிட்டுப் பேசினார். அப்போதும் ஒழிக கோஷமே போட்டுக் கொண்டிருந்த பாஜக.,வினருக்கு கோபத்தை ஏற்படுத்தும் படி, மோடியைப் பற்றி தரக் குறைவாகப் பேசினார். அதைக் கேட்ட பாஜக.,வினர், வைகோ., கேட்டுக் கொண்டபடி, அவர் ஆசையைத் தீர்த்து வைக்க கல்லெறிந்து ஒரு காட்டு காட்டினர்.
இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த வைகோ, கட்சி தொடங்கி 25 ஆண்டு கால அரசியலில், முதல் முறையாக என் மீது கல்லெறி விழுந்து இருக்கிறது என்றார். ஆனால், கடந்த இரு வருடங்களுக்கு முன் காவேரி மருத்துவமனையில் கருணாநிதியைப் பார்க்கச் சென்ற போது, திமுக., காரர்கள் தாக்கியதை மறந்து விட்டார் போலும்! அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று அவர் வேண்டுமானால், சம்பவங்களை மறந்துவிட்டு, வாய்ச்சவடால் அரசியலில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கலாம்…! ஆனால், தமிழகத்தில் எல்லோரும் மறதிக்காரர்கள் இல்லையே!
இப்படி வன்முறையைத் தூண்டும் அரசியலை தொடர்ந்து செய்து கொண்டு வரும் வைகோவுக்கு, வன்முறையே அவருக்குத் தெரிந்த பதிலடி அரசியல் என்று மற்ற கட்சிக்காரர்கள் இறங்கிவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்பதை வைகோ புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, வன்முறையை தூண்டும் வைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய்ய வேண்டும் என்று பாஜக., தமிழக தலைவர் தமிழிசை என்ன சொல்கிறார்…? அவர் கூறியவை….
பாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது வாங்கிவிட்டு அதை மறைக்க இன்று ஒரு போலி ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சார யாத்திரை என்ற பெயரில் வழக்கம் போல் மோடி எதிர்ப்பு பிரச்சாரம் நடத்தி வரும் வைகோ, மோடி அவர்களை நாக்கில் நரம்பில்லாமல் இழிவான சொற்களால் தரம் தாழ்ந்து விமர்சித்து வருவதை கேட்டு பொங்கி எழுந்த பாஜக வினர் உடன்குடியில் அவர் வழியில் கூடிநின்று அறவழியில் கருப்பு கொடியும் கருப்பு பல்லூன்களும் ஏந்தி நின்றபோது அங்கு வந்த வைகோ வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல் தன் தலைமை பண்பை மறந்து தன்னிலை இழந்து காவல் துறையினரை நீங்கள் விலகி நில்லுங்கள் என் தொண்டர்கள் அவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்லி பாஜக வினரை அடியுங்கடா என்று சொன்னதை தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்தோம் அங்கே மோடியை இழித்து பேசியதோடு வன்முறையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்து இருக்கிறார் அவருடன் காரிலிருந்து கொண்டுவந்த இரும்பு கம்பிகளால் எங்கள் தம்பிகளை காயம் ஏற்படும் வகையில் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.
பாஜக உடன்குடி ஒன்றிய நிர்வாகிகள் நெல்லையம்மாள், சங்கர் குமார், மெய்யழகன், துரைராஜ், விஜய சங்கர், சக்திவேல், ராமலிங்கம், பசுபதி சிவாசிங் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். பாஜக தொண்டர்களை கைது செய்து ஒரு மண்டபத்தில் வைத்திருந்த பொது அங்கு வந்த திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த மண்டபத்தை அப்படியே கொளுத்துங்கடா பாஜக கரணை எல்லோரையும் எரிக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி இருக்கிறார். வைகோ வின் உடன் செல்லும் வன்முறை கும்பல் வாகனத்தில் கத்தி, கம்பு, கற்கள் என்ற ஆயுதங்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள் அவருடைய பிரச்சார யாத்திரை வன்முறை யாத்திரை ஆவதால் அதை தமிழக அரசு உடனே தடை செய்ய வேண்டும்.
உலக நாடுகளால் வன்முறையாளர் வைகோ என்று முத்திரை குத்தப்பட்டு மலேசியா போன்ற நாடுகளில் இன்றும் நுழைய அனுமதி இன்றி திரும்பி போ என்று திருப்பி அனுப்பப்பட்ட வைகோ உலகெங்கும் ஓய்வின்றி சுற்றி சுற்றி வந்து எம் தாய் நாட்டின் பொருளாதாரத்தையும், முதலீட்டையும், வேலை வாய்ப்பையும், பெருக்க பெரும்பணி செய்து வரும் பிரதமர் மோடியை விமர்சிக்க தகுதியற்றவர்.
வந்தவரை வரவேற்கும் தமிழர் பண்பாட்டை சீர்குலைத்து திரும்பி போ என்று சிலர் கருப்பு கொடி காட்டினாலும் என் பணியும், சேவையும் தமிழகத்திற்கு என்றும் கிடைக்கும் என்று உறுதியோடு உங்கள் கருப்பு கொடி எதிர்ப்பையையும் மீறி தமிழகம் வந்துவிட்டு சென்ற பாரத பிரதமரை கோழை என்று விமர்சிக்க கடந்த காலங்களில் இலங்கைக்கு கள்ள தோணியில் ஒளிந்து கொண்டு சென்று வந்த வைக்கோவுக்கு பிரதமரை விமர்சிக்க தகுதி இல்லை, அவரின் எல்லை தாண்டிய விமர்சனங்களுக்கு தகுந்த எதிர்ப்பை காட்டிய உடன்குடி பாஜக வினரின் உணர்வு நியமானதே.
எங்கள் தொண்டர்களையும், பொதுமக்களையும் தாக்கிய வைகோ கட்சினரையும் அதன் பின் நிகழ்வாக உடன்குடியில் மீண்டும் வன்முறையை தூண்டி வரும் சட்ட மன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் மீதும் தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்று தனது வேண்டுகோளை அரசுக்கு முன் வைக்கிறார்.
இதே போல், பிரதமருக்கு எதிராக திமுக மதிமுக வினர் கருப்புக்கொடி காட்டிய போது பாஜக வன்முறையில் இறங்கவில்லை. ஆனால் உடன்குடியில் வைகோ விற்கு கருப்புக்கொடி காட்டிய பாஜக வினர் மீது வன்முறை தாக்குதல் நடத்திய மதிமுக வின் வன்முறை செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் – என்றார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர் தனது டிவிட்டர் பதிவில்,
பிரதமருக்கு எதிராக திமுக மதிமுக வினர் கருப்புக்கொடி காட்டிய போது பாஜக வன்முறையில் இறங்கவில்லை. ஆனால் உடன்குடியில் வைகோ விற்கு கருப்புக்கொடி காட்டிய பாஜக வினர் மீது வன்முறை தாக்குதல் நடத்திய மதிமுக வின் வன்முறை செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்
— H Raja (@HRajaBJP) April 22, 2018
என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து வன்முறை அரசியல் என்று, பாத யாத்திரையும் வாகன பயணத்திலுமே சென்று தமிழகத்தை அமைதியின்மையிலேயே இருக்க வைத்துக் கொண்டிருக்கும் நோய் ஆட்டிப் படைக்கும் வைகோ.,வுக்கு ஜெயலலிதா கொடுத்த பாணியில் ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கப் பட வேண்டும் என்று அமைதியை விரும்பும் தமிழர்கள், மாநில அரசுக்கு வேண்டுகோளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.



