2019 – BJP க்கு எதிரான எதிர்க்கட்சிகளின் “மகா கூட்டணி” எப்படி இருக்கும்? ‘மகா கட்பந்தனில்’ காங்கிரஸ் கதி என்ன?
ஏற்கனவே உ பி யில் காங்கிரசுக்கு 8 சீட்டுக்கு மேல் தரமாட்டோம் என்று முலாயம் – மாயாவதி கூறிவிட்டனர். பீகாரில் லல்லு கிள்ளித்தான் கொடுப்பார் – அள்ளிக் கொடுத்துவிட மாட்டார்!
மேற்கு வங்கத்தில் மமதா காங்கிரசை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. 2016 -ல் காங்கிரஸ் CPM உடன் மேற்கு வங்க சட்டமன்றத்தில் அணி சேர்ந்து போட்டி போட்டது. (அதே MAY 2016 -ல் கேரளாவில் CPM க்கு எதிராகக் காங்கிரஸ் கடும் போட்டி – ஒரு மாநிலத்தில் கூட்டு! இன்னொன்றில் எதிர்ப்பு!). மக்கள் காங்கிரஸ் – CPM சந்தர்ப்பவாதக் கூட்டணியை மே வங்கத்தில் வீசி எறிந்தனர்! இப்போது காங் – CPM இரண்டும் கை கோத்தபடி மமதா வீட்டு வாசலில் போய் நின்றாலும் அவர் 42 ல் நாலு சீட்டுக்கு மேல் காங்கிரசுக்குத் தர மாட்டார்.
மகாராஷ்டிரத்தில் ஷரத் பவார் கட்சியுடன் கூட்டு வைத்தால் அவர் மனது வைத்து 10 சீட் கொடுத்தால் கொடுப்பார்!
காங்கிரஸ் தன் சொந்த பலத்தோடு, போட்டியிட – ஜெயிக்க அல்ல- போட்டியிட வலுவான BASE உள்ள மாநிலங்கள் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ஒரிசா கர்நாடகா, கேரளா… போன்றவையே. ஒரு சில வடகிழக்கு மாநிலங்களில் வலு இருப்பினும், அந்த மாநிலங்களில் MP சீட்டுகள் குறைவாக உள்ள சிறிய மாநிலங்கள்.
அதிலும் கேரளா, கர்நாடகா இரண்டும் கூட்டணிக் கட்சிகளுக்கு அது சீட்டுகளைப் பிரித்துத் தர வேண்டிய நிலை – அதுவரை குமாரசாமி கௌடா காங்கிரசுடன் முறுக்கிக் கொள்ளாமல் இருந்தால்!
தமிழ்நாடு? கேட்கவே வேண்டாம்… திமுக என்ன பிச்சை போடுகிறதோ அதைத்தான் வாங்கிக் கொள்ள வேண்டிய நிலை!
ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால், நாடு முழுக்க சேர்த்து, காங்கிரஸ் 250 தொகுதிகளில் “போட்டி இட்டால்”- அதுவே அதிகம்! ‘மகா கட்பந்தன்’-ல் கட்சிகள் கூடக் கூட, காங்கிரஸ் “போட்டி இடும்”- தொகுதிகளே குறையும். (வெல்லும் தொகுதிகள் அல்ல – போட்டி போடும் தொகுதிகள்)
இப்படிப் ‘போட்டி போடும்’ தொகுதிகளே 250 க்குக் கீழே, என்றால், தனி மெஜாரிட்டியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. கூட்டணி ஆட்சிதான் உறுதி என்றால் “யார் பிரதமர்?”- என்ற கேள்வி இயற்கையாகவே எழும்! இந்தக் கேள்வி தேர்தலுக்கு முன்பே கூட எழ வாய்ப்பு உள்ளது!
நேற்றைய நாடாளுமன்ற, ‘கட்டிப் பிடி – கண்ணடி’ கேலிக்கூத்துக்குப் பின் ராகுலைப் ‘பிரதமர் வேட்பாளர்’- என்று முன் நிறுத்தக் கடைந்தெடுத்த முட்டாள் கூட முன்வர மாட்டான்!
‘மகா கட்பந்தன்’- என்ற பெயரில் CPM – காங்கிரஸ் இணைவது மிகப் பெரிய சிக்கலை அவர்களுக்குக் கேரளாவில் ஏற்படுத்தும். 2016 -ல் நடந்தது சட்டமன்றத் தேர்தல்! மேற்கு வங்கத்தில் ஒரே மேடையில் பிரசாரம் – கேரளாவில் சிண்டுபிடி! அதற்கு ‘மாநிலத்துக்கு மாநிலம் கள நிலைமை வேறுபடும் தோழர்’- என்று விளக்கம் தந்தால் அரைமனதுடனாவது ஒப்புக் கொண்டனர் மக்கள்! ஆனால் 2019 நாடு முழுமைக்குமான, இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல்! மே.வங்கத்தில் காங்கிரஸ் நல்ல கட்சி – கேரளாவில் அது மோசம் எனவே எதிர்க்கிறோம் என்று மக்களை டபாய்க்க முடியாது!
அப்படி அகில இந்திய “மகா கட்பந்தனில்” இடது சாரிகளும் – காங்கிரசும் ஒன்றுபட்டு, கேரளாவில் மட்டும் அடித்துக் கொண்டாலோ, அல்லது கேரளாவிலும் அவர்கள் கை கோத்துக் கொண்டாலோ கேரளாவில் BJP கைதான் ஓங்கும். மலபார் பகுதியில் உள்ள முஸ்லீம் DOMINATED தொகுதிகள், கோழிக்கோடு – எர்ணாகுளம் பகுதிகளில் உள்ள CHRISTIAN DOMINATED தொகுதிகள் நீங்கலாக சுமார் 5 – 8 தொகுதிகள் BJP வசமாகும்! அகில இந்திய அளவில் இடதுசாரிகளும் – காங்கிரசும் கை கோத்து, கேரளாவில் மட்டும் இணையாவிட்டாலும், அல்லது கேரளாவிலும் இணைந்தாலும், BJP க்குதான் அது லாபம்!
மேலும் ‘மகா கட்பந்தன்’ ஏற்பட்டால் அதில் அமைய உள்ள ஒவ்வொரு கட்சியுமே அதிகாரப் பசி உள்ளவை – அதிலும் 1990 – களின் வி பி சிங், தேவ கவுடா, குஜ்ரால் ஆட்சிகளில் டில்லி அதிகார ருசியை அனுபவித்தவை. என்னதான் மாநில அளவில் REGIONAL PARTY ஆகக் கோலோச்சினாலும், டில்லியில் மைய அதிகாரம் – அதிலும் ‘கனமான’ இலாகாக்கள் – இவற்றின் ‘ருசி’ யை எல்லா மாநிலக் கட்சிகளுமே வெவ்வேறு காலங்களில் பார்த்தவை! அவற்றை காங்கிரசுக்கு மட்டுமே ஏகபோகமாகப் பட்டா போட்டுக் கொடுக்க எந்த மாநிலக் கட்சியும் முன்வராது!
இதற்கு நேர் மாறாக 21 மாநிலங்களில் ஆட்சி அதிகாரம் கையில் – NDA வுக்கு நட்புக் கரம் நீட்டத் தயாயாக உள்ள “மனம் திருந்திய மைந்தர்கள்” (The Prodigal sons), இயற்கையாகவே பருப்பு முதலிய தானியங்களின் விலை வீழ்ச்சி, மோடி என்ற மிகப் பெரும் தலைவனின் அளப்பரிய சக்தி, காசுக்குக் களமாடாமல், கொள்கை உத்வேகத்தோடு ட்விட்டர் முதல் தெருமுனைப் பிரசாரம் வரை சொந்தத் தன்னார்வத்தில் களமிறங்கும் பெரும்படை – (இப்படிப்பட்ட காசை எதிர்பாராத, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ‘கொள்கைப் படை’ எதிர் அணியில் ‘மகா கட்பந்தனில்’ CPM – CPI கட்சிகளிடம் மட்டுமே உண்டு ), இவை எல்லாம் BJP யின் ADVANTAGES!
எனவே ‘மகா கட்பந்தன்’- ஏற்பட்டால் அதனால் கரையப் போவது காங்கிரஸ்தானே தவிர BJP அல்ல!! #2019 COUNTDOWN
கருத்து:- முரளி சீதாராமன்




