
சென்னை: சென்னை ரயிலில் பொதுப்பெட்டியில் அமர்ந்திருந்த வடமாநில பயணிகளிடம் கத்தியைக் காட்டி நகைகளைக் கொள்ளை அடித்த திருநங்கைகள் 5 பேர் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப் பட்டனர்.
சென்னை செண்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஹௌரா ரயில் நின்று கொண்டிருந்தது. அந்த ரயிலின் பொதுப் பெட்டியில் அமர்ந்திருந்த வட மாநில பயணிகளிடம் புஜ்ஜிமா, அனனியா ஆகியோர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் வசூலித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நகைகளை அபகரித்துக் கொண்டு, வியாசா்பாடியைச் சேர்ந்த திருநங்கைகளான சோபியா, கவிதா, பிரேமா ஆகியோரிடம் சென்று கொடுத்துள்ளனர்.
ரயிலில் திருநங்கைகள் நகைப் பறிப்பில் ஈடுபட்டதை அறிந்த ரயில்வே போலீஸார், அவர்களைப் பின் தொடர்ந்து சென்றனர். பின்னர், வழிப்பறியில் அபகரித்த பொருட்களைக் கைப்பற்றி இந்தச் சம்பவத்தில் ஈடுப்பட்ட 5 பேரையும் கைது செய்து ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



