பகுதிகள் 12, 13 களில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களிலும், வேறு கட்டுரைகளிலும், அரசு ஆவணங்களிலும் ஏராளமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.
இங்கே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அணுவளவே..
ஒரு முஸ்லீம்… மத வெறியன்… இரண்டு முஸ்லீம்கள் சேர்ந்தால் சதித் திட்டம் உருவாகிறது. மூன்று முஸ்லீம்கள் ஓன்று சேர்ந்து விட்டாலோ மதக் கலவரம் உண்டாகி விடுகிறது…
1946 அக்டோபர் மாதத்தில் வங்காளத்தில் நடைப்பெற்ற நவகாளி கலவரங்களைப் பற்றியோ,மாப்ளா கலவரத்தைப் பற்றியோ, இந்த நாட்டிலே நடைப்பெற்றுள்ள வேறு கலவரங்களைப் பற்றியோ இங்கு விவரிக்க இடமில்லை.
ஆனால் அவற்றைப் பற்றியெல்லாம் நம் நாட்டவர்,குறிப்பாக ஹிந்துக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இந்த தொடரைப் படிப்பவர்களில் பெண்களும் இருக்கின்ற படியால், சொல்லவோ, எழுதவோ இயலாத வன்கொடுமைகள் அவர்களுக்கு எதிராக நடந்தேறின என்பதை மட்டும் பதிவு செய்கிறேன்.
மதன்லால் பஃவா விற்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பார்த்தோம்…
மேலும்… பாரதத்தில்…பிரிவினையால் சொந்த நாட்டிற்கே அகதிகளாகத் திரும்பியவர்களின் எண்ணிக்கை 70 லட்சமிருக்கும்.
டெல்லியில் மட்டும் பத்து லட்சம் பேர் அகதிகளாக திரும்பி இருந்தனர். நாடு திரும்பியவர்களின் துயரங்கள் நாடு திரும்பியதாலேயே தீர்ந்து விடவில்லை.
இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட கூடாரங்களிலே ஆடுகளைப் போல்,மாடுகளைப் போல் அவர்கள் அடைக்கப்பட்டனர். ஆனாலும் அவையும் நிரம்பி வழிந்தன.
மேலும் வந்துக் கொண்டிருந்தவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது போதாதென்று வதந்தி ஓன்றும் காட்டுத் தீ போல் பரவத் தொடங்கியிருந்தது.
அது… அகதிகளாக வந்தவர்கள் அனைவரும் மீண்டும் எங்கிருந்து வந்தார்களோ, அங்கேயே திரும்பிச் சென்று எதுவுமே நடக்காத மாதிரி வாழ்க்கையை தொடர வேண்டும் என்பதே…
இந்த வதந்திக்கு ஒரு அடிப்படை காரணமிருந்தது. அகதிகளாக வந்த ஹிந்துக்கள், புதிதாக உருவான பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டும். பாகிஸ்தானுக்குச் சென்று விட்ட முஸ்லீம்கள் பாரதம் திரும்பி ஹிந்துக்களிடையே அமைதியாக வாழ்க்கையை தொடர வேண்டும் என காந்தி அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருந்தது வெளிப்படையாக தெரிந்திருந்தது.
ஆம் இதைச் சொல்ல காந்தியால் மட்டுமே முடியும்..
ஏனென்றால்… அவர் ஒரு மகாத்மா,மக்களை இரட்சிக்க வந்தவர்,ஞானி,தவறுகளே இழைக்கத் தெரியாதவர்; ஆனால் இங்கு அகதிகளாக வந்து விட்ட ஹிந்துக்களுக்கோ அவர் ஹிந்துக்களை வெறுப்பவராக,முஸ்லீம்களை நேசிப்பவராக,ஒரு எதிரியாகக் காட்சித் தந்தார்.
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்




