உண்ணாவிரதம் என்பது, சமூகத்திலே நடைபெறும் நியாயமற்ற செயல்களை ‘அகிம்சை ‘ முறையிலே எதிர்ப்பதாகும்.. என்று விளக்கமளித்தார் காந்தி. வேறு வழிகள் இல்லாத போதுதான் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்வதாக காந்தி தெரிவித்தார்.
ஒரு சமயம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் காந்தியை நேரடியாகவே சந்தித்து ‘’ உங்களுடைய ‘ அகிம்சை ‘ பற்றிய பிதற்றல்களை, தயவுசெய்து விட்டு விடுங்கள்; உங்களால் இந்த தேசத்தின் க்ஷத்திரிய தேஜஸே மாசு படுகிறது‘’ என்று கூறியிருந்தார்.
ஆனால் காந்தி, தான் பிடிச்ச முயலுக்கு மூணே கால் எனும் குணம் உடையவர் ஆயிற்றே; எந்த நியாயமான அறிவுரையையும் கேட்பவரில்லை …
மசூதிகளிலிருந்து ஹிந்துக்கள் வெளியேறாவிட்டால் உண்ணாவிரதம் என்று மிரட்டுபவர்… பாகிஸ்தானில் ஹிந்துக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது… ஹிந்து பெண்கள் கற்பழிக்கப்பட்ட போது உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லையே…!
தன்னை, ஹிந்து மதத்தை பின்பற்றுபவர் என்று கூறிக் கொண்டவர் 1938ல் ‘வந்தே மாதரத்தை‘ தடை செய்ய வேண்டுமென ஜின்னா வற்புறுத்திய போது அதற்கு ஒப்புக் கொண்டார்.
ஹிந்து சாம்ராஜ்யம் அமைத்த சத்ரபதி சிவாஜியை பற்றி யாராவது பேசினால் உடனே தடுத்து நிறுத்துவார். ஏனென்றால் முஸ்லீம்கள் மனம் புண்படுமாம். ’முஸ்லீம் ‘ வெறியாட்டங்களை ‘ எடுத்துரைத்த ‘ ‘ சிவ பவானி ‘ எனும் பாடலைத் தடை செய்தார்.
காந்திக்கு தன் அம்புறாத் தூணியிலிருந்த கடைசி அம்புதான் உண்ணாவிரதம்…
ஆனால் காந்தியின் உண்ணாவிரதம் ஹிந்து-முஸ்லீம் மனங்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த முடியவில்லை என்றால் வேறு எந்த வகையிலும் அது சாத்தியமில்லை என நம்பியவர்கள் அந்தக் காலத்தில் இருக்கத்தான் செய்தார்கள்…
இது புறமிருக்க… தேசப் பிரிவினையின் காரணமாக ஏற்பட்ட விளைவுகளில் ஒன்று…
ஆங்கிலேய அரசு விட்டுச் சென்ற அசையும் சொத்துக்களை ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது.
அதன்படி, கப்பல்கள், விமானங்கள், துப்பாக்கிகள், தோட்டாக்கள், ரெயில் இன்ஜின்கள், ரெயில் பெட்டிகள், லாரிகள், அலுவலக மேஜை நாற்காலிகள், அலுவலகக் கோப்புகள் என அனைத்துமே பங்கு போடப்பட்டது..
ரிசர்வ் வங்கியில் கணக்கிலிருந்த 220 கோடி ரூபாயும் பங்கு போடப்பட்டது. அதில் 25 சதவிகிதமான 55 கோடி ரூபாய் புதிதாக உருவான பாகிஸ்தானுக்கு கொடுப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த அனைத்து அசையும் சொத்துக்கள் மற்றும் ‘ ரொக்க மீதம் பற்றியக் கணக்கு ‘ போடுதல் அவ்வளவு எளிதாக முடிந்து விடவில்லை.
1947 ஆம் வருடம் நவம்பர் மாதம் வரை இழுபறி நீடித்தது… அதன் பின் தான் இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது..
[ தொடரும் ]
– எழுத்து: யா.சு.கண்ணன்




