December 5, 2025, 2:09 PM
26.9 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 19): உண்ணாவிரதம் தோற்ற இடம்!

mahatma gandhi - 2025

காந்தியின் இந்த உண்ணாவிரதம் வெற்றி பெறுமா?  இதற்கு முன்பு வெற்றி பெற்றிருக்கிறதே !

1921 ல் வேல்ஸ் இளவரசர் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்ள பாரதம் வந்த போது, அவருக்கு எதிர்ப்பு காட்டும் விதமாக அவர் செல்லும் இடமெல்லாம் ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டுமென காந்தி மக்களை கேட்டுக் கொண்டார். ஹர்த்தால் என்பது அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்கும் முறையாகும்.

கடைகள் மூடியிருக்கும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள், தெருக்கள் வெறிச்சோடிக் காணப்படும்…

ஆனால், வேல்ஸ் இளவரசர் காலடி எடுத்து வைத்த முதல் இடமான பம்பாயில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் தெருக்களில் திரண்டு கோஷங்கள் எழுப்பி, வேல்ஸ் இளவரசருக்கு கறுப்புக் கொடிகள் காட்டி தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

கூட்டத்தைக் கலைக்க காவல்துறை பலப்பிரயோகம் செய்தது. கூட்டம் சிதறி ஓட, ஆங்கிலேய அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் தாறுமாறாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

வன்முறை பாரதத்தின் பல இடங்களுக்கும் பரவும் சூழ்நிலை நிலவியது. காந்தி அதிர்ச்சியடைந்தார். அமைதி திரும்புவதற்காக காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.

ஐந்து நாட்களுக்குள் கலவரங்கள் குறையத் தொடங்கின. மூன்று வருடங்களுக்குப் பிறகு காந்தி மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார்.

இந்த உண்ணாவிரதம் 21 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவித்தார்.

உண்ணாவிரதத்தின் நோக்கம் : மக்களின் பாவங்களுக்காக தன்னை தண்டித்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.

வடமேற்கு எல்லை பகுதியிலிருந்த கோஹட் எனும் இடத்தில் பெரிய அளவில் ஹிந்து முஸ்லீம் கலவரம் வெடித்தது.

அது இரு சமூகங்களிடையேயும் மனமாச்சர்யங்களை உருவாக்கி நாடெங்கும் கலவரங்கள் பரவும் நிலை ஏற்பட்டது. காந்தியின் உண்ணாவிரதத்தின் காரணமாக இரு சமூகங்களுக்கிடையே தற்காலிகமாக அமைதி திரும்பியது. அதன் பின் காந்தி உண்ணாவிரதம் என்பது அவ்வப்போது நடக்கும் நிகழ்வாகிப் போனது.

1932ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பாக ஒரு உண்ணாவிரதம் நடந்தது. காலவரையற்ற உண்ணாவிரதம் என்று அறிவிக்கப்பட்டு, ஐந்து நாட்களில் முடிவிற்கு வந்தது.

மீண்டும் 1943ல், ’ வெள்ளையனே வெளியேறு ‘ இயக்கத்தின் போது நடந்த காவல் துறை மற்றும் இராணுவத்தின் அத்துமீறல்களைக் கண்டித்து நடைப்பெற்றது.அது 21 நாட்களுக்கு நீடித்தது.

1947ஆம் வருடம்,செப்டம்பர் மாதம் 1ந்தேதி காந்தி மறுபடியும் உண்ணாவிரத அறிவித்திருந்தார். அது, கல்கத்தாவில் ஹிந்துக்கள் பெரிய அளவில் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், அதனை முடிவிற்குக் கொண்டு வரவும்..

அப்போது கல்கத்தாவின் கவர்னராக ராஜாஜி இருந்தார். அவர் காந்தியிடம் உண்ணாவிரதத்தை கைவிடும்படி பேசிப் பார்த்தார்.

‘’ என்னுடைய உள்ளத்தில் இருந்து ஒரு குரல் எனக்கு வழிகாட்டுகிறது. அதன்படி நான் நடக்கிறேன் ‘’ என்றார் காந்தி.

‘’ நீங்கள்தான் அந்த உள்ளிருந்து வழிகாட்டும் குரலான கடவுளிடம் உங்களை ஒப்படைத்துக் கொண்டு விட்டீரே, அதன் பிறகு, உண்ணாவிரத காலங்களில் ஏன் தண்ணீருடன் எலுமிச்சை சாறை கலந்து சாப்பிடுகிறீர்கள் ’’ என்று ராஜாஜி கேட்டார்.

‘’ நீங்கள் சொல்வது சரிதான். எலுமிச்சை சாறு சாப்பிடுவது என்னுடைய பலவீனம்தான். அதை நிறுத்தி விடுகிறேன் ‘’ என்றார் காந்தி.

இந்த முறை உண்ணாவிரதத்தின் நோக்கம் 73 மணி நேரத்தில் நிறைவேறியது.

ஆக, காந்தியின் இறுதி ஆயுதமான உண்ணாவிரதம் கடந்தக் காலங்களிலே வெற்றியை பெற்று தந்திருக்கிறது..

ஆனால் இந்த முறை.. கொந்தளித்துக் கொண்டிருந்த அகதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கோபம், கண் எதிரே கற்பிழந்த பெண்கள் பற்றிய சிந்தனை ஓட்டம், ஆயிரக்கணக்கில் பலியான ஆண்களும் பெண்களும்….

காந்தி இருந்தால் என்ன செத்தால் என்பதாகத்தான் அவர்கள் மன நிலை இருந்தது..

’ பழிக்கு பழி ‘ என்பதாக மட்டுமே அவர்கள் எண்ண ஓட்டம் இருந்தது. ‘ இரத்தத்திற்கு இரத்தம் ‘ என்று கோஷமிட்டு டெல்லி வீதிகளெங்கும் வலம் வந்தனர்.

‘எங்களுக்கு அமைதி தேவையில்லை, எங்கள் சிறுமிகளை, இளம் பெண்களை, திருமணமான தாய்மார்களை.. வயது வித்தியாசம் பாராது சின்னாபின்னமாக்கிய முஸ்லீம் வெறியர்களை விட முடியாது… அவர்கள் கொன்று குவித்த ஆயிரக் கணக்கான ஹிந்துக்களின் மரணத்திற்கு முஸ்லீம்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் ‘’

இந்த வெறிதான் ஹிந்துக்களிடையே நிலவியது… காந்திக்கும் இது புரிந்து போனது..

’‘ அகிம்சைக்கு நாம் விடை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் ‘’ என்று தன் செயலாளரான பியாரிலாலிடம் காந்தி கூறினார்.

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories