கூட்டம் முடிந்து, கலைந்து சென்ற வெறிக் கும்பல் ஹிந்துக்களின் வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என கோர தாண்டவம் ஆடியது. இவையெல்லாம் காட்டுமிராண்டித்தனமான இஸ்லாமியர் ஆக்கிரமித்த காலக்கட்டத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது.
இந்தக் கொலை வெறித் தாக்குதல் இரண்டு நாள் இடைவிடாமல் நடந்தது. கழுத்து முறிக்கப்பட்ட கோழிபோல வேதனையில் துடுத்தது கல்கத்தா. போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்தபடி தாக்குதலை முதல்வர் கண்காணித்துக் கொண்டிருந்தார்.
குற்றம் புரிந்ததாக கைது செய்யப்பட்ட அனைவரும் முதல்வரின் உத்தரவின் பேரில் உடனே விடுவிக்கப்பட்டனர். ‘ தீயதைப் பார்க்க மாட்டேன், தீயதைக் கேட்க மாட்டேன்‘ என்றபடி கவர்னர் எஃப் பர்ரோஸ் தனது அறையிலேயே சிலை போல் அமர்ந்திருந்தார்.
பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் மற்றும் அதிகாரிகள் செய்த முறையீடுகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லானது. தற்காப்பிற்காகவேனும் பொங்கி எழாவிட்டால், தங்கள் கதி அதோகதிதான என்பதை ஹிந்துக்கள் உணர்ந்தனர்.
பொங்கி எழுந்த ஹிந்துக்களின் ஆவேச அலை முஸ்லீம்களுக்கு எதிராகத் திரும்பியது. முஸ்லீம்கள் உதை வாங்குவதைக் கண்டதும் கவர்னரின் செவியில் கடமையின் அழைப்பு விழுந்தது.
ராணுவத்தை அழைத்து கலவரத்தை ஒடுக்க உத்தரவிட்டார். கொல்லப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை 10,000க்கும் மேல். படுகாயமடைந்தவர்கள், கை,கால்கள் இழந்தோர்,15,000. வீடு,வாசல் இழந்து அனாதையானவர்கள் 1 லட்சத்திற்கும் மேல்.
‘ ஸ்டேட்ஸ்மன் ‘ பத்திரிகையைச் சேர்ந்த கிம் கிரிஸ்டன் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர், ‘’ கடுமையான யுத்தங்களை நேரில் கண்டவன் நான் ; போர் இது போல இருப்பதில்லை.இது கலவரமும் கிடையாது.இதை வர்ணிக்க வார்த்தை ,மத்தியகால வரலாற்றில்தான் உள்ளது.
அது ‘ வெறித்தாக்குதல் ‘.வெறித்தாக்குதலோ திடீரெனப் பீறிட்டு வருவது.இங்கே இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது ‘’ என்று எழுதினார்.
ஆகஸ்ட் கடைசி வாரத்தில் வைஸ்ராய் வேவல் கல்கத்தாவிற்கு வருகை புரிந்தார். அவரது முன்னிலையில் கல்கத்தா ராணுவ கமாண்டர் மற்றும் வங்காள் அரசின் தலைமைச் செயலாளர் இருவரும்,நடந்த வன்செயல்களில் முதல்வர் சுஹ்ரவர்த்தி குற்றவாளி என்று அம்பலப்படுத்தினார்கள்.
ஹிந்துக்களின் பதிலடி என்ற எதிர்பாராத திருப்பம் நேரவே முஸ்லீம் லீகின் படுகொலைத் திட்டத்தில் அவர்கள் கணித்திருந்த முடிவுகள் தவிடுபொடியானது.
அதிகார வர்க்கமும், போலீஸும் உடந்தையாக இருந்து சகல வசதிகளும் செய்து கொடுத்தும் லீகின் ரெளடிக் கூட்டத்தால் ஹிந்துக்களை மிரட்டிப் பணிய வைத்து விட முடியவில்லை.
‘சாது ஹிந்து‘ தனது பாரம்பரிய வீரம் காட்டி முஸ்லீம் லீக் கூட்டத்தை ஒட்டமெடுக்கச் செய்தான்.
(தொடரும்)
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து : யா.சு.கண்ணன்




