காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 124)

கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
gandhi godse - 2026

சாதாரணமாக,Dr. ஜெயின் அருகாமையிலிருந்த போலீஸ் நிலையத்திற்கு சென்று மதன்லால் பஹ்வாவை பற்றித் தனக்கு தெரிந்தவைகளை சொல்லியிருக்க வேண்டும்.

அதற்கு பதிலாக என்ன காரணங்களாலோ அவர் அப்போதைய இந்திய துணைபிரதமர் படேலை நேரில் சந்திக்க அனுமதிக்கேட்டு விண்ணப்பித்தார்.அதே போல் காங்கிரஸ் கட்சியின் பம்பாய் தலைவரை சந்திப்பதற்கும் முயற்சித்தார்.

இரண்டு முயற்சிகளும் தோல்வியடையவே பம்பாய் மாகாண முதல் அமைச்சர் B.G.KHER ஐ சந்திக்க முயன்றார்.

( இதே போன்றதொரு நிகழ்வை அமெரிக்காவின் வரலாற்றிலும் நம்மால் பார்க்கமுடிகிறது.

வருடம் 1963…

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவருக்கு ,ஜனாதிபதி கென்னடி அவர்கள்,அவருடைய டெல்லாஸ் பயணத்தின்போது கொல்லப்பட இருக்கிறார் என்ற தகவல் தெரிய வந்தது.ஆனால் அவர்,இந்த தகவலை துணை ஜனாதிபதி அல்லது கேபினட் அந்தஸ்தில் உள்ள ஒருவரிடம்தான் பகிர்ந்து கொள்வது தீர்மானித்தார்.

விளைவு…..போலீசாருக்கு உரிய நேரத்தில் தகவல் போய்சேராது கென்னடியும் கொல்லப்பட்டார் ).

ஜனவரி மாதம் 21ந் தேதி மாலை 4 மணியளவில்தான் ,முதலமைச்சரின் அறைக்குள் செல்ல அவருக்கு அனுமதி கிடைத்தது.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

ஆனால்.Dr.ஜெயின் விஷயத்தை விளக்கத் தொடங்குமுன்னரே,முதலமைச்சர் கேர் எங்கோ செல்லவேண்டியிருந்ததால்,அப்போதைய பம்பாய் மாகாண உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாயிடம் Dr.ஜெயினை அனுப்பி வைத்தார்.

பின்னாளில் இந்தியாவின் பிரதமரானரே அதே மொரார்ஜி தேசாய்தான்.

மொரார்ஜி தேசாய் வசம்தான் போலீஸ் இலாகா இருந்தது.

நியாயமாக மொரார்ஜி தேசாய் என்ன செய்திருக்க வேண்டும் ?

அவருடைய கதையை போலீஸிடம் சென்று கூறச்சொல்லி அறிவுறுத்தியிருக்க வேண்டும்;

இல்லையென்றால் யாராவது ஒரு அதிகாரியை அழைத்து,Dr.ஜெயின் கூறுவதைப் பதிவுசெய்ய சொல்லியிருக்க வேண்டும்.

அதற்கு பதிலாக ,அவர் Dr.ஜெயின் கூறிய எல்லாவற்றையும் பொறுமையாகக் காது கொடுத்து கேட்டது மட்டுமல்லாமல்,தன் மூலம்தான் இந்த தகவல் வந்தது என்பதை போலீஸிடம் தெரிவிக்க வேண்டாம் என்ற அவரின் வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டார்.

அவர்களுடைய உரையாடல் பதிவுசெய்யப்படாததின் விளைவாக,

பின்னாளில்…காந்தி கொலை நடந்தபிறகு…

அவர்களின் சந்திப்பின் போது,என்ன பேசப்பட்டது என்பதை மொரார்ஜி தேசாய் அவர்களாலும் சரி Dr.ஜெயின் அவர்களாலும் சரி முழுமையாக நினைவுப்படுத்திக் கூறமுடியவில்லை.

மதன்லால் பஹ்வாவின் கூட்டாளியென்று கார்கரே என்ற பெயரை மட்டுமே Dr. ஜெயின் தன்னிடம் தெரிவித்ததாக மொரார்ஜி தேசாய் அவர்களும்,

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

(காந்தி கொலையுண்டபிறகு போலீசார் விசாரித்தபோது) ‘’இல்லையில்லை,மொரார்ஜி தேசாய் அவர்களிடம் நான் மற்ற கூட்டாளிகளைப் பற்றியும் கூறினேன் ‘என்று Dr.ஜெயினும் வாதிட்டனர்.

காந்தி கொலைக்கு பிறகு ,பரஸ்பரம் இருவரும் ஒருவரைஒருவர் யார் என்ன கூறினார்கள் கூறவில்லை என்பதுபற்றி கடுமையாகக் குற்றஞ்சாட்டி கொண்டார்கள்.

Dr.ஜெயின் கூறுகையில்…

‘ ஒரு கட்டத்தில் மொரார்ஜி தேசாய் அவர்கள் கடுங்கோபம் கொண்டு,தன்னையும் சதிகாரர் என்று கூறியதாகவும்,அதற்காக அவரை சிறையில் அடைக்கமுடியும் என்று மிரட்டியதாகவும்,ஏன் தனக்கு சதியைப்பற்றி முதலிலேயே தெரிவிக்கவில்லை என்று கத்தியதாகவும்,

மொரார்ஜி தேசாய் அவர்கள் பேசியதையெல்லாம் தான் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு இருந்து விட்டு…

அவரிடம்,

‘’ நான் சதிகாரன் என்றால் நீங்கள் கொலைகாரர்
…நான் மறுபடியும் மறுபடியும் இந்த உலகத்திற்குச் சொல்லுவேன் நீங்கள் குற்றவாளி,நீங்கள் குற்றவாளி ‘’ என்று கூறியதாகவும் தெரிவித்தார் ‘.

Dr.ஜெயின் தன்னிடம் கூறிய விஷயத்தின் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக மொரார்ஜி தேசாய் எடுத்திருந்தால் காந்தி கொலையை தடுத்திருக்கலாம்.

( தொடரும் )

  • எழுத்து: யா.சு.கண்ணன்
ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.