பாகிஸ்தானின் பொய்யை தமிழகத்தில் பரப்பும் தறுதலைகள்!

Published:

attack pakistan - 2026

இந்திய விமானப்படை பாகிஸ்தானிய நிலப்பரப்பில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை… அப்படி தாக்குதல் நடத்தச் சென்ற விமானங்களை பாகிஸ்தான் விமானங்கள் விரட்டியதால் , திரும்பி வரும் வழியில் விமானத்திலிருந்த வெடிகுண்டுகளை கீழே வீசி விட்டு தப்பி வந்துவிட்டனர்… என்ற பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை அப்படியே பிரதி எடுக்கும் புல்லுருவிகளுக்கு சில கேள்விகள்..!?

ஒரு வாதத்திற்காக இது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். நேற்று சுமார் 11 மணி அளவில் இந்திய வெளியுறவுத் துறை செயலர் திரு விஜய் கோகலே அவர்கள் , நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய முழு விவரங்களையும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதன்படி எத்தனை இடங்களில் தாக்கினோம் , அதனுடைய விளைவுகள் என்னென்ன , எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கக்கூடும், அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட முக்கியமான நபர்கள் யார் யார் என்பதை எல்லாம் தெரிவித்தார் ….

தாக்குதல் நடைபெற்றது நேற்று அதிகாலை சுமார் மூன்று முப்பது மணி அளவில் …. ஒருவேளை பாகிஸ்தான் சொல்வதுபோல அங்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால் , நேற்று காலையிலேயே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று , இதோ இந்த இடங்களைத்தான் இந்தியா தாக்கியதாக சொல்லிக்கொள்கிறது ….இங்கு எதுவுமே நடக்கவில்லை பாருங்கள்… என்று காட்டுவதில் என்ன பிரச்சினை? அப்படி காட்டி இருக்கலாமே?

சரி பதினொன்று முப்பது மணி அளவில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இன்னின்ன இடங்களை நாங்கள் தாக்கினோம் என்று தெளிவாக அறிவிக்கிறார்… அதன்பிறகு அந்த இடங்களில் இப்போதைய புகைப்படங்களை, அல்லது வீடியோக்களை பாகிஸ்தான் பகிரலாமே?

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

இதோ பாருங்கள் இங்குதான் தாக்குதல் நடத்தியதாக இந்தியா சொல்கிறது… இங்கு எந்த பாதிப்பும் இல்லை என்று காட்டலாமே? ஏன் காட்டுவதில்லை?

சரி பத்திரிகையாளர்களை அவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம்…. பாகிஸ்தான் அரசு ஒரு ஹெலிகாப்டர் மூலம் மேலே சொன்ன இடங்களுக்கு மேலே பறந்து சென்று ஒரு வீடியோ எடுத்து அதை மீடியாக்களில் ஒளிபரப்பலாமே ?அதை யார் வேண்டாம் என்று சொன்னார்கள்?

மேலும் இன்னின்ன பயங்கரவாதிகள் , அதாவது மேற்படி பயங்கரவாத அமைப்பின் கமாண்டர்கள் இன்னின்னார் கொல்லப்பட்டார்கள்.. என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது . அப்படி அவர்கள் யாருமே கொல்லப்படவில்லை என்றால் , இதோ அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்று காட்டலாமே? ஏன் மசூத் அசார் கூட மேற்படி தளபதிகளை தன் அருகிலேயே அமர வைத்து ஒரு வீடியோ எடுத்து அதை ஒளிபரப்பலாம்…. இதோ பாருங்கள் இவர்களைத்தான் இந்திய ராணுவம் கொன்று விட்டதாக சொல்லிக்கொள்கிறது… இவர்கள் யாரும் கொல்லப்படவில்லை… உயிருடன் தான் இருக்கிறார்கள் என்று காட்டலாமே?

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

அடுத்ததாக இந்திய ராணுவமும் இந்திய வெளியுறவு அமைச்சகமும் குறிப்பிட்டுள்ள பாதிப்புக்கு உள்ளான இடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதை ஏன் பாகிஸ்தான் தடுக்கிறது? அந்த இடங்களுக்கு யாரையுமே அனுமதிக்காமல் பாகிஸ்தான் ராணுவம் தடுக்கவேண்டிய அவசியம் என்ன ?

இந்த கேள்விகளுக்கெல்லாம் ஏதாவது பதில் இருக்கிறதா? தாக்குதல் நடந்தது உண்மை. இந்திய வெளியுறவு அமைச்சகம் சொன்னது மறுக்கமுடியாத , அசைக்கமுடியாத உண்மை…. அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் (ஏற்றுக்கொண்டால் அவமானம்) அதேசமயம் தாக்குதல் நடந்திருப்பதாக இந்திய ராணுவம் சொல்வதை ஆதாரபூர்வமாக மறுக்கவும் முடியவில்லை ….சரி இந்திய ராணுவம் தாக்கவில்லை என்று பாகிஸ்தான் சொல்லிக் கொண்டால் அவர்கள் அப்படி சொல்லிக் கொண்டு இருக்கும் வரை இந்தியா திரும்ப திரும்ப தாக்கிக் கொண்டே இருக்கும் …பாகிஸ்தான் வெளியே சொல்லவும் முடியாது இதுதான் அவர்களுடைய நிலைமை…

இதைப் புரிந்து கொள்ளும் அறிவு கூட இல்லாமல் இந்த நாட்டில் பிறந்து , இந்த நாட்டில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு , இந்திய சோற்றைத் தின்றுகொண்டு இந்த தேசத்துக்கு எதிராக பதிவு செய்யும் துரோகிகள் அனைவரும் இப்படி ஒரு பிழைப்பு பிழைக்க வேண்டியது அவசியமா என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்!

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

– சரவண குமார் Saravana Kumar

Related articles

Recent articles

spot_img