நரேந்திர மோடி என்ற ராஜரிஷி..!

இந்த வார கேள்வி-பதில் பகுதியில் ஒரு கேள்விக்கு, மோடி பிரம்மரிஷி அல்ல என்று ஆசிரியர் குருமூர்த்தி சொல்லியிருக்கிறார்.

அது அவரது தனிப்பட்ட கருத்து, என்று சொல்லிவிடலாம் என்றாலும், இந்த இதழ் வெளிவந்த அன்று நடந்த சம்பவங்களின் அடிப்படையில் என் மனதில் நினைவுக்கு வந்த ஒரு புராணகாலத்து சம்பவம்.

ஜனகரை எல்லாரும் ராஜரிஷி என்கிறார்களே, ஆனால் பரந்துபட்ட ராஜ்யபரிபாலனம் செய்துகொண்டிருப்பவன் எப்படி ரிஷி என்று அழைக்கப்படமுடியும், நான் சதாசர்வகாலமும் தவம் செய்துகொண்டிருப்பவன் என்னையே சிலர் ரிஷி என்று அழைப்பதற்கு தயங்குகிறார்கள் என்று ஒரு புராணகால முனிவருக்கு சந்தேகம் வந்தது. அப்படி ராஜரிஷி என்று அழைக்கப்படுவதற்கு தகுதியாக ஜனகர் என்னதான் செய்துகொண்டிருக்கிறார் என்று நேரிலேயே பார்த்துவிடலாம் என்று ஒரு முனிவர் ஜனகரின் அரசவைக்கு சென்றார்.

முனிவரை பார்த்தவுடன் ஜனக ருக்கு மகிழ்ச்சி, முனிவருக்கு சம்பிரதாயப்படி மரியாதைகள், பாதபூஜை செய்து, அருகிலே ஒரு ஆசனத்தை அளித்து உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது வேகமாக ஒரு காவலாளி வந்து, அரசே, அரண்மனைக்கு வெளியே ஊர் தீப்பிடித்து எரிகிறது என்றான், அதற்கு, சரி, தக்க நடவடிக்கை எடுக்க மந்திரியிடம் நான் சொன்னதாக சொல் என்று ஆணையிட்டுவிட்டு உரையாடலை தொடர்ந்தார். சற்று நேரத்தில் இன்னொரு காவலாளி ஓடி வந்து, அரசே, நமது அரண்மனையிலும் தீ பரவிவிட்டது, என்றான், அதற்கும் அசராமல், அரண்மனை பணியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள், நாம் உரையாடலை தொடரலாம் என்றார் ஜனகர். முனிவருக்கு ஆச்சர்யம். இன்னும் சற்றுநேரத்தில், மற்றொரு காவலாளி ஓடிவந்து, அரசே, அரண்மனை முற்றும் அழிந்துவிட்டது, ராணிமார்கள், மக்கள் அனைவரும் தீயில் அழிந்துவிட்டார்கள் என்றான்.

முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாமல், முனிவரிடம் உரையாடலை தொடர முற்பட்ட ஜனகரிடம் என்ன ஒரு மன்னனுக்கு உரிய கடமைகளை ஆற்றாமல், குடும்பத்தலைவனுக்குரிய கடமைகளை மறந்து, உரையாடலை தொடரவேண்டும் என்கிறாயே, இது சரியா என்று முனிவர் கேட்டதற்கு,

முனிவரே, இந்த காவலாளி சொன்னது உண்மையாயிருந்தால், மந்திரிகளும், பிரதானிகளும் எனது ஆணையை எதிர்பார்க்காமல் தக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள்; அப்படியே உண்மையாயிருந்து அனைவரும் அழிந்திருந்தாலும், என்றேனும் ஒருநாள் அனைவரும் இறக்கவேண்டியவர்தாமே, அதற்கு நான் கவலைப்படுவதாலோ, வேறேதும் செய்வதாலோ, விதியை மாற்றமுடியுமா. ஏதாகியிருந்தாலும், எனது கடமை பணிசெய்து கிடப்பது, அதற்கேற்றவரை பணியிலமர்த்தி விட்டு பற்றற்று கிடப்பது, அதனாலேயே, நமது உரையாடலை தொடர்ந்தேன் என்றார். நீரே ராஜரிஷி என்று ஜனகரை வாழ்த்திவிட்டு நடையைக்கட்டினார் அந்த முனிவர்.

பாகிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடந்தபோது மோடியின் நிகழ்ச்சிகளை சற்று உற்றுநோக்குங்களேன்:

முந்தைய இரவு 9 .25 க்கு தனது அரசவை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு வீடு திரும்பினார் மோடி; இரவு தூங்கவில்லை; அதிகாலை 3.30 க்கு பாகிஸ்தான் வான்வெளிக்குள் ஊடுருவிய இந்திய விமானங்கள் தாக்குதலை முடித்துவிட்டு பாதுகாப்பாக திரும்பியபின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு ஓய்வெடுக்க சென்றார். அதன்பின்னர், ஏதும் நடக்காத மாதிரி, காந்தி அமைதிவிருது நிகழ்ச்சியில் அஹிம்சை பற்றிய கருத்துரை, டெல்லி மெட்ரோவில் குழந்தைகளுடன் செல்பி, முசல்மான்களுடன் அளவலாவல், இஸ்கான் கோவிலில் பகவத்கீதைக்கு ஆரத்தி என்று மிக சாதாரணமாக நடந்துகொண்டார். ஒரு ரிஷிக்கான நடத்தை இது அல்லாமல் வேறு எது இருக்கக்கூடும்?

எனக்கென்னவோ, இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் பாக்கி எச்சைகளோ, காங்கி அடிபொடிகளோ நினைப்பதுபோல வரவிருக்கும் தேர்தலை ஒட்டியது அல்ல, உலகநாடுகளுக்கு ஒரு மெசேஜ் சொல்கிறார் மோடி என்று தான் தோணுகிறது. முக்கியமா, சீனாவுக்கு. அதோடல்லாது, இது புதிய இந்தியா, நீங்கள் இதுவரை பார்த்ததுபோல காங்கி தலைமை அல்ல, இது வல்லரசு இந்தியா என்று அழுத்தமாக சொல்லும் மெஸேஜோ என்று தான் தோணுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, தீவிரவாதத்தால் நாங்களும் பாதிக்கப்பட்டவர்கள்தான், தீவிரவாதத்தை ஒடுக்குவதில் நாங்கள் தான் முன்நிற்கிறோம் என்று சொல்லிவந்த பாகிஸ்தானுக்கு இன்று இந்தியா ஒரு செய்தி சொல்லியிருக்கிறது. வாங்க, நாம ரெண்டுபேரும் சேர்ந்து தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று. இது வேற லெவல் சாமி இந்த விளையாட்டு.

– மு.ராம்குமார்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...