பிரஸ் மீட்.. ராகுலுக்கான சிறப்பு கவன ஈர்ப்பு பிரசாரம் மட்டுமே!

ராகுல் ..பிரஸ் மீட் வைத்ததும், கேள்விகளுக்கு பதிலளித்ததும் சந்தேகமில்லாமல் பாராட்டுக்கு உரிய அரசியல் கணக்கு.

ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி மாணவிகளிடம் உரையாடியதும், நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி வளாகத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதும்.. எதிர்கூட்டணியின் இலக்கை தெளிவுபடுத்துகிறது.

இலங்கையில் போரின் போது லட்சக்கணக்கில் தமிழர்கள் படுகொலையான நிலைக்கு ..காங்கிரசின் பங்கு எதுவும் இல்லை என்று கூறிய போது ..
இது போன்றதொரு பதில்.. சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் சாத்தியப்பட்டிருக்குமா? என்று யோசிக்க வைத்தது. அப்போது பொங்கியவர்கள் , கண்ணீர் விட்டு காட்டியவர்கள் அனைவரும் இன்று..அதே காங்கிரசுடன் கூட்டணியில் இருப்பதால் ..இது சாத்தியமாகி இருக்கிறது !!

குறைந்த பட்ச ஊதியம், தொழில்முனைவோரை உருவாக்குவது போன்ற மோடியின் வாக்குறுதிகளை அப்படியே வழிமொழிந்தது.. வேடிக்கை.

மோடியை அகற்றுவதே தங்கள் லட்சியம் என்று கூறியது அபத்தம். நாடு முழுவதும் எதிர் கூட்டணிக்கு மக்களிடம் கூறி வாக்கு கேட்பதற்கு … வளர்ச்சி குறித்த திட்டங்கள் எதுவுமே சொந்தமாக இல்லை என்பது மீண்டும் தெளிவாகியது.

விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி என்று காங்கிரஸ் கூறும்போதெல்லாம்..சரத் பவார் முதல் ப.சி . வரையிலான காங்கிரசின் விவசாயிகள் குறித்த வரலாறு கண்முன்னே வருகிறது !

கேட்கப்படாத…ஆனால்..கேட்டிருக்க வேண்டிய hard hitting கேள்விகள் :

  1. மோடி வேண்டாம் என்கிறீர்கள். பதிலாக உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ? UPA-ன் 10 வருட ஆட்சியின் அவலட்சணங்கள் குறித்து பதில் சொல்லுங்கள் என்கிற கேள்வி கேட்கப் படவேயில்லை.

உங்கள் கட்சியின் தலைவர்கள் அனைவரும் ஊழல் வழக்கில் ஜாமீனில் இருக்கிறார்களே என்றும் கேட்கவில்லை.

  1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழருக்காக உருகும் நீங்கள்..காவிரி பிரச்சினையில் ..தமிழகத்திற்கு எதிராக நிலைப்பாடு எடுத்த கர்நாடக காங்கிரஸ் அரசிடமும், காங்கிரஸ் முதல்வராக இருந்த சித்தராமையாவிடமும் காவிரி நீரில் தமிழகத்திற்கு உள்ள உரிமை குறித்து ஏன் பேசவில்லை ? என்கிற கேள்வி கேட்கப்படவில்லை.

  2. பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து தேர்தலை சந்திப்பது அராஜகமானது என்று ராகுல் கூறியபோது …

சுதந்திர இந்தியாவில் 70 வருடங்களுக்கும் மேலாக ஒரே குடும்பத்தின் கையில் ஒரு தேசியக் கட்சி இருப்பது பெரும் அராஜகம் இல்லையா ? என்கிற எதிர் கேள்வி கேட்கப்படவேயில்லை.

  1. ஒரே கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும்போது அது சர்வாதிகாரத்திற்கு இட்டு செல்கிறது என்று கூறியபோது…

கட்சிகளின் கூட்டணி ஆட்சி ..பெரும் பெரும் ஊழல்களை கூட்டாக சேர்ந்து செய்யும் காட்டாட்சிக்கு இட்டுச்சென்ற வரலாறு இருக்கிறதே என்கிற கேள்வி கேட்கப்படவேயில்லை.

ஆக…பிரயோஜனமில்லாத இந்த பிரஸ் மீட் என்பது.. ராகுலுக்கான ..ஒரு கவன ஈர்ப்பு பிரச்சாரம் மட்டுமே.

~ பானு கோம்ஸ் Banu Gomes .

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...