காங்கிரஸ் வென்றால் திமுக ஆட்சியாம்! புறவாசல் வழியே வரத் துடிக்கும் வெட்கங்கெட்ட ஸ்டாலின்!

உரத்த சிந்தனை கட்டுரைகள்

stalin veeramani speech - 2026

பதவி – ஊழல் இது தான் திமுகவின் சொல்லப்படாத தேர்தல் அறிக்கை.

வர வர பதவி கிடைக்காத வெறுப்பில் ஸ்டாலினின் பிதற்றல்கள் அதிகரித்து கொண்டேயிருக்கின்றது. அதற்கு சமீபத்திய உதாரணம் பிரதமர் ஏழை தாயின் மகன் என பிதற்று கின்றாராம்.

பிரதமர் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்துள்ளதை அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. அடிக்கடி தான் கலைஞரின் மகன் என சொல்லும் ஸ்டாலின், தான் விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிந்தவரின் மகன் என சொல்ல தயாரா?

அதைப்போல அவர் முதல்வர், துணை முதல்வரையும் வசை பாடுவதை தவறாமல் செய்து வருகிறார்.

அவருக்கு ஒரு கேள்வி, உங்கள் தந்தையின் செல்வாக்கில் கட்சித் தலைவரான உங்களுக்கு திமுகவில் உண்மையாக பணிபுரிந்து உயர வேண்டும் என எண்ணுவோருக்கு திமுக என்ன வாய்ப்பளித்தது?

திமுகவில் மாவட்ட செயலாளர்கள் எனும் குறுநில மன்னர்களின் வாரிசுகளுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் சீட் வழங்கும் திமுக ஏதேனும் ஓர் ஏழைத்தாயின் மகனுக்கு கருணாநிதி தலைமைக்கு வந்த பிறகு வழங்கியதுண்டா? தேர்தல் நேர்காணல் எனும் பகல் கொள்ளையில் எத்தனை செலவு செய்ய முடியும் எனும் கேள்வி தான் தவறாமல் இடம் பெறுகிறது.

தனக்கு பதவி கிடைக்கவில்லை எனும் தனது இயலாமையால் ஏழை மக்களை கொச்சைப்படுத்துவதை ஒருக்காலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பதவி எனும் வெறியில் பேசப்படும் பிதற்றல்கள் பணத்தாசையை தான் காட்டுகிறது.

5 முறை ஆண்ட திமுக… ஊழலால் உள்நாட்டு பாதுகாப்பை கோட்டை விட்ட திமுக… தினம் தோறும் விரைவில் திமுக ஆட்சி என பேசி பதவி ஆசையை வெளிகாட்டி வெற்று பிரச்சாரம் செய்யும் ஸ்டாலினுக்கு மக்கள் நல திட்டங்களை முன்னிறுத்தி செய்த சாதனைகளை சொல்லிக் காண்பித்து பிரச்சாரம் செய்யும் பிரதமரைக் கண்டால் ஏளனமாகத்தான் தெரியும்

ஏனெனில் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும், பதவி, ஊழல் என சிந்திக்கும் திமுகவிற்கு ஏழைகள் முன்னேற்றம் குறித்து என்ன அக்கறை இருக்கப் போகிறது?

வெற்றுப் பேச்சு பேசுவோர் மத்தியில் இலக்கு வைத்து செயல்படும் பிரதமர் ஏழை மக்கள் மட்டுமல்ல இந்த தேசத்தை முன்னேற்றுவார் என்ற கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் தமிழகத்தில் உடனே திமுக ஆட்சிக்கு வரும் என வெட்கமே இல்லாமல் பேசும் ஸ்டாலின் புறவாசல் வழியாக பாஜக ஆட்சி புரிகிறது என விமர்சிக்க தகுதியேயில்லை என யாராவது அவரிடம் சொன்னால் நலம்.

– ஆனந்த் பரத்வாஜ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.