25-03-2023 6:42 PM
More
  Homeஉரத்த சிந்தனைமோடிக்கு எதிராக... அமர்த்தியா சென் ஏன் விஷம் கக்குகிறார்..?!

  To Read in other Indian Languages…

  மோடிக்கு எதிராக… அமர்த்தியா சென் ஏன் விஷம் கக்குகிறார்..?!

  amarthyasen modi - Dhinasari Tamil

  எதனால் அமர்தியா சென் எப்போதுமே மோதிஜிக்கு எதிராக விஷத்தை வாரித் தெளிக்கிறார்..?

  UPA அரசாங்கம் 2007 இல் நாலந்தா பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தபோது அமர்த்தியா சென் அந்த பல்கலைக் கழகத்தின் முதல் வேந்தராக (Chancellor) நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தில் மிக முக்கியமானது அடானமி (தன்னாட்சி) என்கிற பெயரில் வரம்பு மீறிய அதிகாரம் அளிக்கப்பட்டு… எந்த கணக்கும் அரசுக்கு வழங்க வேண்டியதில்லை என்கிற அளவு அவர் அதிகாரம் அங்கு கொடிகட்டிப் பறந்தது.

  கற்பனை செய்து பாருங்கள், ஒரு வேலையில் இருப்பவர் வரிகட்டுபவர்களின் பணத்தை அளவில்லாமல் செலவழித்துவிட்டு அதற்கான எந்த கணக்கிற்கும் பொறுப்யேற்க வேண்டியதில்லை என்பது என்ன மாதிரியான அயோக்யத்தனமான சுதந்திரம் என்பது. அது மட்டுமல்ல அவர் தனக்கு மாத சம்பளமாக 5 லட்ச ரூபாய் எடுத்துக் கொண்டார். எந்த பல்கலைக்கழக வேந்தருக்கும் இப்படிப்பட்ட வருமானம் எங்குமே இருந்ததில்லை. அதோடு அவர் எத்தனை முறை வேண்டுமானாலும் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் இவர் பயணம் செய்யலாம்.

  இத்துடன் இந்தக் கதை முடியவில்லை. 2007 முதல் 2014 வரை 7 வருடங்கள் 2730 கோடிகளை இவர் வாரி இறைத்திருக்கிறார் ஆனால்.. இன்னமும் அந்த பல்கலைக்கழகம் முழு அளவில் இயங்கவே ஆரம்பிக்கவில்லை. இவர் எந்த கணக்கும் தர வேண்டியதில்லை என்று ஏற்கனவே UPA அரசாங்கம் இவருக்கு விலக்கு அளித்திருந்தபடியால், அந்த பணம் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் அந்த செலவுகள் சட்டத்தின் வரம்பிற்குட்பட்டது.

  இப்போது நாம் நியமனங்களைப் பார்ப்போம்..!

  அமர்த்தியா சென்னின் நியமனங்களும் எந்த விளக்கங்களுக்கும் வழக்குகளுக்கும் உட்பட்டது இல்லை என்பது இவருக்கு வழங்கப்பட்ட உரிமை. இவர் யார் யாரை நியமனம் செய்தார் என்றால்…
  முதலில் 4 பேராசிரியர்களை நியமித்தார். அவர்கள்…

  ☄️டாக்டர்.உபீந்தர் சிங்
  ☄️அஞ்சனா சர்மா
  ☄️நயன்ஜோத் லஹரி
  ☄️கோபா சபர்வால்

  இவர்களெல்லாம் யார்..?
  டாக்டர் உபீந்தர் சிங் என்பவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள். மற்ற மூவரும் இவரின் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள்.

  அடுத்ததாக மறுபடியும் அமர்த்தியா சென் இன்னமும் இரண்டு நபர்களை கெஸ்ட் பேராசிரியர்களாக நியமனம் செய்தார். (GUEST” faculties)
  டாமன் சிங்
  அம்ரித் சிங்

  அவர்கள் இருவரும் யார் என்று பார்த்தால்.. இருவரும் மன்மோகன் சிங்கின் நடு மற்றும் கடைசி மகள்கள்.

  இதில் அப்படிப்பட்ட தனித்தன்மை என்ன இருக்கிறது.. என்றால் இந்த டாமன்சிங், அம்ரித் சிங் இருவரும் அந்த 7 வருடங்களும் தொடர்ந்து அமெரிக்காவிலேயே வசித்திருக்கிறார்கள் ஆனால் இவர்களுக்கு கெஸ்ட் பேராசிரியர் என்கிற கணக்கில் மிகப் பெரிய தொகை சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளது. என்ன சம்பளம் என்றால் அது அந்த கடவுளுக்கும், சம்பளம்வாங்கிய மன் மோகன்சிங் புதல்விகளுக்கும் மட்டுமே தெரியும் ஏனென்றால்.. நாலந்தா பல்கலைக்கழகம் அரசாங்கத்திற்குக் கணக்கு கொடுக்க வேண்டியதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது அதே அரசாங்கத்தால்..!

  அடுத்ததாக…

  ☄️இந்த பல்கலைக்கழகத்திற்கு ஒரே ஒரு கட்டிடம் தான் உள்ளது.
  ☄️இதற்கு மொத்தமே 7 பேராசிரியர்களும் மற்றும் சில கெஸ்ட் பேராசிரியர்களுமே (பல்கலைக்கழகத்திற்கு வரவே வராத) உண்டு.
  ☄️100 க்கும் குறைவாகவே மாணவர்கள் அங்கு இருக்கிறார்கள்.
  ☄️அந்த பல்கலைகழகத்தில் எந்த உபகரணங்களும், எந்த எதிர்வினைப் பொருட்களும் கிடையாது. ஏனெனில்.. அங்கு எந்த அறிவியல் ரிசர்ச்சுகளும் நடைபெறவில்லை.
  ☄️அப்படியும் இதுவரை செலவிட்ட தொகை 2730 கோடிகள்

  அதாவது.. அமர்த்தியா சென்னுக்கு அளவில்லாத, கணக்கு காட்டவேண்டிய அவசியமில்லாத அளவு அரசாங்கப் பணம் (நம் வரிப்பணம்) மன்மோகன் சிங்கினால் ஒதுக்கப்பட்டிருந்தது.

  2014 இல் மோதிஜி அரசாங்கம் பதவியேற்றதும் இந்த பல்கலைக்கழகத்தைப் பற்றியும் அதில் நடக்கும் அயோக்யத்தனங்கள் பற்றியும் தெரிந்து கொண்டார். இந்த பஞ்சமா பாதகனான அமர்த்தியா சென் என்கிற விஷ அட்டைப் பூச்சியை 2015 இல் அங்கிருந்து எட்டி உதைத்து அந்த விஷம் செய்த அத்தனை நியமனங்களையும் ரத்து செய்தார்.

  அதனாலேயே இவர் மோதிஜி அரசையும் அவரின் பொருளாதாரக் கொள்கைகளையும் தொடர்ந்து நம் மீடியாக்கள் மூலமாக விமர்சனம் செய்துகொண்டே இருந்தார்.

  அதாவது மாதத்திற்கு 5 லட்சங்கள் சம்பளம் பெற்றுக் கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு நம்முடைய வரிப்பணமான 2700 கோடிகளை தனக்கும் தன் நண்பர்களுக்கும் தன் இஷ்டப்படி கரைத்துக் கொண்டு.. ஆனால் எந்த வேலையும் செய்யாமல் இருந்தார்.

  இதிலிருந்து தெரிவது.. ஒருவர் நோபல் பரிசு பெற்றவர் என்பதனால் அவர் மிகவும் சுத்தமானவர் என்றோ அவருக்கு எந்த உள் நோக்கமும் இல்லை என்பதும் கிடையாது. பெரிய படிப்பு படித்திருந்தாலும், நோபல் பரிசு வாங்கியதாலும் மட்டுமே ஒருவருடைய பிறவி குணம் மாறும் என்பதும் கிடையாது. படிப்பிற்கும், பதவிக்கும், குடும்ப பெருமைக்கும், தனிப்பட்ட குணங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது புலப்படுகிறது.

  மன்மோகன் சிங் கூடதான் PhD பட்டம் பெற்றவர். அதனால் அவருக்கு அரசாங்கத்தை நடத்தத் தெரிந்திருந்ததா..? இந்திய சரித்திரத்திலேயே மிக மோசமான பிரதமர் இவர்தான். இவர் காலத்தில்தான் இந்திய அரசாங்கத்தில் ஊழல் தலைவிரித்து ஆடியது.

  இந்த அமர்த்தியாசென் மீது சட்டப்படி எந்த ஊழல் வழக்கும் பதிக்க முடியாது. ஏனெனில்.. UPA அரசாங்கம் அப்படிப்பட்ட சட்டங்களை ஏற்படுத்தி அதன்படிதான் இவர் செயல்பட்டார். கணக்கு வழங்க வேண்டியதில்லை என்பதால் அந்த பணம் யாருக்கு வழங்கப் பட்டது என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது.

  அதாவது சட்டப்படி 2730 கோடிகளை UPA அரசாங்கம் சில பல கோடிகளை படித்தவர்களுக்கு அளித்துவிட்டு மிச்சம் மீதியை தாங்கள் சுருட்டிக் கொள்ள செய்ய ஒரு வழிவகை இது என்று நாம் கொள்ளலாம்..!

  – பிரேமா எஸ்.ஐயர்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  three × one =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Most Popular

  மக்கள் பேசிக்கிறாங்க

  ஆன்மிகம்..!

  Follow Dhinasari on Social Media

  19,035FansLike
  388FollowersFollow
  83FollowersFollow
  74FollowersFollow
  4,634FollowersFollow
  17,300SubscribersSubscribe

  சமையல் புதிது..!

  COMPLAINT BOX | புகார் பெட்டி :

  Cinema / Entertainment

  நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

  நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

  லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

  திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

  கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

  அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

  7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

  7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

  Latest News : Read Now...