ட்ரோன்களால் பாகிஸ்தான் புதிய அச்சுறுத்தல்! வான் வழி விதி மீறல்!

Published:

trone - 2026

பாகிஸ்தான் ட்ரோன்கள் இந்தியாவுக்குள் ஆயுதங்களைக் கடத்தியது வான்வழி விதிமீறல் பிரச்சனை என்று இந்திய விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதௌரியா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, சிறிய ட்ரோன்களால் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க சில நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு வான்வழி விதிமீறல் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

செப். 22-ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ் மாதிரி ஜிஹாதி பயங்கரவாத அமைப்புகள் பஞ்சாப் மாநிலத்தில் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது அம்மாநில காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ட்ரோன்களின் உதவியுடன் இந்தியாவுக்குள் ஆயுதங்கள் கடத்தப்படுவதும் தெரியவந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img