பாகிஸ்தானும் சீனாவும் செய்யும் சதி தில்லி காற்று மாசு: வினித் அகர்வால்!

இந்தியா பொது தகவல்கள்
vinith akarwal - 2026

தில்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது. இதற்கு பாகிஸ்தானும், சீனாவும் காரணம் என உ.பி. பாஜக மூத்த தலைவர் வினித் அகர்வால் ஸ்ரதா புகார் கூறியுள்ளார்.

இது குறித்து மீரட்டின் பாஜக தலைவரான வினித் அகர்வால் ஸ்ரதா கூறியாதாவது:

‘இந்தியாவை பார்த்து பாகிஸ்தானும், சீனாவும் அஞ்சுகிறது. இதனால் நம் நாட்டில் பாகிஸ்தான் நச்சு வாயுவை கசிய வைத்து தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் காற்றை மாசுபட வைக்கிறது.

இதன் மீது மத்திய அரசு மிகவும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். இதுவரை இந்தியாவுடன் தொடுத்த போர் அனைத்திலும் பாகிஸ்தானுக்கு தோல்வியே கிடைத்துள்ளது.

பிரதமராக நரேந்திர மோடியும், அமித்ஷாவும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது முதல் பாகிஸ்தானுக்கு சிக்கல் உருவாகி உள்ளது. இது தெரியாமல் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இந்த மாசுக்களுக்கு விவசாயிகள் எரிக்கும் வயல்வெளி காரணம் எனத் தவறாக எண்ணி வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.